வியாழன், 28 மார்ச், 2024

தொடக்கம் விழா ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂photo news by arunan journalist 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு

அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தொடக்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் புதிய புரட்சி பயணம்.

28. 3 .2024 வியாழக்கிழமை இன்று காலை 11:30 மணி அளவில் தூத்துக்குடியில் 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு

அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது.



இதுபற்றி செய்தியாவது;-

இந்த கூட்டமைப்பின் நோக்கம்

********************* 

🔥 கடந்த 30 வருடங்களாக தூத்துக்குடி மண்ணில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி, நிலம் நீர் காற்றை நஞ்சாகி, மனித உயிர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று , விவசாயங்களை அழித்து, மண்ணை மலடு ஆக்கிய நச்சாலை ஸ்டெர்லைட் காலூன்றி இருக்கிறது. 


தமிழ்நாட்டு அரசின் சிறந்த வாதங்களை மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கையாண்டது. 


அதன் மூலமாக உச்ச நீதிமன்றம் இனி ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு எந்த விதத்திலும் முறை அல்ல என்று தீர்ப்பு கொடுத்து பொதுமக்களை 

மகிழ்ச்சி ஏற்படுத்தியது.


ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்குமா என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


 தற்போது நடக்கின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஸ்டெர்லைட்டை அடுத்து ஆட்சியை பிடிக்கும் கட்சி திறப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.


 அது எப்படி இருந்தாலும் 

அதை எதிர்கொள்ள தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

 ஸ்டெர்லைட்டை எப்படியாவது அதன் அடிக்கற்களும் ஆணிவேர்களும் பிடுங்கி எறியப்படும் வரை ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற தலையாய நோக்கம் ஒன்று. 


🔥 இரண்டாவது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 2018 மே 22 அன்று 15 உயிர்கள்  படுகொலை செய்யப்பட்டார்கள்.


 அந்த 15 உயிர்களை படுகொலை செய்யப்பட்ட கயவர்களை அரசுத்துறை அதிகாரிகளை ..

இன்று வரை கைது செய்கின்ற நடவடிக்கை வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. 


முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன்  அறிக்கையில் கூட 17 பேரை தண்டிக்க வேண்டும் சிறை படுத்த வேண்டும் என்று கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.



 அதுபற்றி....

சட்டமன்றத்தில் பெரும் விவாதங்களும் நடந்து விட்டன. 


ஆனால் சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களும் பொது வழியில் நடந்த விவாதங்களும் அறிக்கைகளும் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. 


அருணா ஜெகதீசன் அவருடைய அறிக்கை வைத்து 17  அரசு அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்கிற விவாதம் முடியுமா முடியாதா என்பது கேள்விக்குறி.



 தமிழ்நாடு அரசும் அதற்கான முயற்சியை எடுத்ததாக தெரியவில்லை.


 ஆகையால் அரசு துறையை சேர்ந்த 17 அதிகாரிகளையும் காவல்துறை சிறை படுத்த வேண்டும் அவருடைய பதவிகளை பறிக்க வேண்டும் என்ற நோக்கமும்... 


🔥மூன்றாவதாக, மே 22 2018 ஆம் வருடம் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டார்கள்.


 மண்ணைக் காக்க போராடிய மகத்தான போராட்டத்தில் 15 உயிர்கள் மீது துப்பாக்கிக் குண்டு துளைக்க ரத்தம் பீறிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.


 மண்ணைக் காக்க போராடிய 15 போராளிகளுக்கு தூத்துக்குடியின் மையப் பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற மிக பிரதான கோரிக்கையும் முன்வைத்தும், அது மட்டுமல்ல பொதுமக்களை பாதிக்கின்ற பொது மக்களின் உயிர்களை அச்சுறுத்துகின்ற நச்சாலைகள் தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கும் நுழையக்கூடாது என்கிற மிகப் பிரதான கோரிக்கையும் முன்வைத்து, 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.


தமிழர் விடியல் கட்சி

மாவட்ட பொறுப்பாளர் 

சேமா. சந்தனராஜ் பாண்டியன் 


தமிழ் புலிகள் கட்சி

மாவட்ட பொறுப்பாளர் 

ஆட்டோ சரவணன், தாஸ் 


தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாவட்ட செயலாளர் 

A. பிரசாத் 


மனிதநேய ஜனநாயக கட்சி 

மாவட்ட செயலாளர் 

M. அசன் 


திராவிடர் கழகம் 

தூத்துக்குடி பெரியார் மைய காப்பாளர் 

ஐயா சு காசி


 ஆகிய கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சியின் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக