செவ்வாய், 26 மார்ச், 2024

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்துபிஷப், ஆதீனம் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு

thoothukudileaks 27-3-2024

photo news by sunmugasunthram Reporter 

தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பிஷப், ஆதீனம் உள்ளிட்டோர்  ஆதரவு தெரிவித்தனர்.


     தூத்துக்குடி மக்களவை தேர்தலைெயாட்டி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதாித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



 இதனையடுத்து நேற்று தூத்துக்குடி இராமநாதபுரம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழியையும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, ஆகியோரை ஆதாித்து எட்டையாபுரம் சிந்தலக்கரை பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார் .


அப்போது தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதியில் திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமையில் குருவானவர்களும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிாின்ஸ் கிப்ட்சன், உபதலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல மேல்நிலைப்பள்ளி மேலாளர் பிரேம்குமார், ராஜாசிங், செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், கன்னியாகுமாி மாவட்ட பால பிரஜாதிபதி அடிகளார்,  தூத்துக்குடி பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம்பட்டர், வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மாியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு தொிவித்தனர். 

 வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர்கள் மனோதங்கராஜ், தங்கம் தென்னரசு, தமிழக சிறுபான்மை ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக