thoothukudileaks 5-5-2023
Photo news by shanmuga sunthram
தூத்துக்குடி குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன.
அப்பகுதி மட்டுமின்றி பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியிருந்து பயன்படுத்தி வரும் குடிதண்ணீர் தாமிரபரணி, பாபநாசம், பகுதியிலிருந்து வரபெற்று கலியாவூர், வல்லநாடு, நீர்த்தேக்கங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகரில்... ஒவ்வொரு பகுதிகளிலும் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அதற்குட்பட்ட பகுதிகளுக்கு மக்கள் தொகைக்கேற்ப குடிதண்ணீர் விநியோகம் சப்ளை செய்யப்படுகிறது.
அதை முறையாக வழங்குவதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மூலம் செயல்படுகிறது.
கடந்த ஆண்டு பருவமழை சற்றுக்குறைவாக இருந்ததால் பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது இருந்தபோதும் தாமிரபரணி உள்ளிட்ட சில நீர்வழித்தடங்கள் பகுதியில் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகரில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சிபாட்டில் மூலம் விற்பனை செய்யப்படுவதை கண்டறியப்பட்டு அங்கு மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார் தலைமையில் இந்த இரு இடங்களிலும் சீல் வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதியில் குழாய்கள் மூலம் குடிநீர் செல்லும் பகுதிகளில் புதிய பைப் லைன்கள் அமைக்கும் பணியும் உடைப்புகள் எற்பட்ட இடங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான லெவஞ்சிபுரம் பகுதியில் 2000ம் ஆண்டு அமைக்கப்பட்ட பைப் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் இரவு பகலாக குடிநீர் செல்லும் பாதையில் நடைபெற்று வந்த புதிய பைப் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தற்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ளதால் இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படும். குடிநீர் ஆய்வாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்...
மாநகராட்சி நிர்வாகத்தில் பொறுப்பேற்ற பின் பல்வேறு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம்.
அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்கள் பணியை தடையின்றி செய்ய வேண்டும் பொதுமக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் என்று எங்களுக்கு கூறியதின் அடிப்படையில் பாராபட்சமின்றி அனைத்து வார்டுகளுக்கும் முறையாக குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதில் எதுவும் குறைபாடுகள் இருந்தால் என்னிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கலாம். என்று பல முறை நானும் கூறியுள்ளேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தவறான வழியில் குடிதண்ணீர் உறிஞ்சி எடுத்த இரண்டு இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மற்ற பகுதிகளிலும் இருந்தால் அதை மாமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் தவறு செய்பவர்களுக்கு துணை செல்ல கூடாது. தற்போது கோடைகாலமாக இருப்பதால் குடிநீர் அனைவருக்கும் தடையின்றி வழங்க வேண்டியுள்ளது.
இதில் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை என்றும் கடந்த வாரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக