சனி, 6 மே, 2023

ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 21 ஸ்கேட்டிங் மாணவ மாணவிகள்

thoothukudileaks 6-5-2023

photo news by tamilan Ravi

 தூத்துக்குடி உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து 24 மணி நேர தொடர் உலக சாதனை முயற்சியில் ஈடுபடும் 21 ஸ்கேட்டிங் வீரர்கள்



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேர தொடர்ந்து பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை முயற்சி இன்று காலை ஆறு மணி அளவில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் துவங்கியது இந்த சாதனை முயற்சி நாளை காலை 6 மணி அளவில் நிறைவடைகிறது


இந்த உலக சாதனை முயற்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் துவக்கி வைத்தார்.


 உலகிலேயே முதல்முறையாக 24 மணி நேரம் தொடர்ந்து பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 21 ஸ்கேட்டிங் மாணவ மாணவிகள் ஈடுபட்டுள்ளனர் .


மாணவ மாணவிகளின் இந்த சாதனையை பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டி ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக