thoothukudileaks 26-4-2023
photo news by shanmuga sunthram
மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பிஎம் கிசான் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் ரோஹித்ராஜ் பேசுகையில் இந்த திட்;டத்தில் அரசு பணி செய்பவர்களும் பென்சன் வாங்குபவர்களும் இதில் பங்கு கொள்ள முடியாது ஒருகுடும்பத்தில் ஓரு நபருக்கு மட்டும் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் பயனடைய முடியும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கு தேவையான மண்வெட்டி கடப்பாறை பண்ணை அறிவாள் மின்கலத்தெளிப்பான் உள்ளிட்ட 6 வகையான பொருட்கள் மாணிய விலையில் வழங்கப்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தான சோளம் கம்பு கேழ்வரகு திணை குதிரைவாழி சாமை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்;சி, ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மற்றும் ஜெயசீலன், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக