thoothukudileaks 27-4-2023
News by Arunan
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக நடைபெற்றது
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி செய்தியாவது
27-4-2023 இன்று காலை 11 மணியளவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்று கலெக்டர் இடம் மனு அளித்தனர் ...
நேதாஜி சுபாஷ் சேனை, தமிழ்நாடு அமைப்பு மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
நேதாஜி சுபாஷ் சேனை வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ...
அவர் பேசியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு விட்டால் இங்கிருப்போருக்கு மிகப் பெரிய ஆபத்து நேரிடும்
ஏனென்றால்?
வேலை வாய்ப்பு ஸ்டெர்லைட் ஆலை கிடைப்பதாகவும் அது பாதிக்கப்படுவதாகவும் சொல்வது முதலில் அது பொய்
ஏறக்குறைய 10 லட்சம் இருக்க கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு 500 பேரு கூட வேலை பார்க்க இல்லை ? அதுவும் லேபராக தான் இருக்கிறாங்க.. ஏற்கனவே பீஸ்சிங் கம்பெனி இருக்கு தெர்மல்.சிப்காட் என நிறைய விஷயம் இங்கே ஏகப் பட்ட தொழிற்சாலை இருக்குது...
சும்மா ?
இங்கே ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின்பு வேலை வாய்ப்பு இல்ல திரும்ப திரும்ப பொய் சொல்வது தவறான விஷயமாகும்
அந்த ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்ட பின்னாடி இங்க நிலத்தடி நீர் நல்ல முறையில் கிடைச்சிட்டு இருக்கு ... மக்கள் நிம்மதியாக நல்ல காற்றை சுவாசிக்கிட்டு இருக்காங்க
இங்குள்ள சமுக விரோத சக்திகளுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் பணம் கொடுப்பதாக தகவல் வருகிறது.
இந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீதும் ...
இந்த பணத்தை வாங்கி கொண்டு
ஒரு சமூக விரோத அபாயகரமான தொழிற்சாலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தான் இன்று (27-4-2023) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த முற்றுகையை பதிவு செய்து இருக்கிறோம்.
தொடர்ந்து இனிமேல் சமூக விரோத சக்திகளுக்கு போராட்டத்திற்கு ? இடம் கொடுத்தால் ... இங்கு சட்டம் - ஒழங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதனையெல்லாம் ? கடுமையான முறையில் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம்.
இது ஒரு வேளை நடைபெறாமல் ...
மீண்டும் ..?
மீண்டும் ....?
சமூக விரோத சக்திகள் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் ... திறக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்தால் ?
பதிலுக்கு
நாங்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்க நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு பேசினார் வழக்கறிஞர் மகாராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக