thoothukudi leaks 14-3-2024
news by
Shanmuga Sundaram
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி தான் நிற்கிறார்.
தேர்தலில் அதிமுக- பிஜேபி டெபாஸிட் இழக்கும்? # அமைச்சர் கீதா ஜீவன்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பூத்கமிட்டி ஓருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இதுவரை நடைபெற்று இருக்கும் பணிகள் குறித்து இனி நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார்.
ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுாிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார்.
இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்ற வருவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது.
திமுக ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் .
வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது.
அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும். ஏற்கனவே அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். என்று கூறியுள்ளார்.
அதே போல் மகளிர் அணியும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
அனைத்து அணிகள் மட்டுமின்றி ஓன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேருர் செயலாளர்கள் என ஓட்டுமொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
2024 நாடாளுமன்ற தோ்தலில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிடவுள்ளார்கள்.
கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பொிய வெற்றியை ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம்.
பொதுமக்களுக்கு ெதாியும் அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர் இளம்பரிதி, அபிராமிநாதன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் வக்கீல் ரூபஸ், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி பொருளாளர் உலகநாதன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், நெசவாளர் அணி தலைவர் சீதாராமன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக