இன்னும் தவிப்பில் தூத்துக்குடி அதிமுக
தேர்தல் காரியாலயம் எங்கே ? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாராகியும் திறக்க படாத அதிமுக தேர்தல் காரியாலயம்
இதுபற்றி செய்தியா வது:-
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு செய்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் எம்ஜிஆர் திடலில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அறிமுகம்பொதுகூட்டம் நடத்தினார்.
இதனால் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில்
உற்சாகம் தொற்றியது
ஆனால்?
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தலைமை தேர்தல் காரியாலயம் திறக்காமல் ?இன்று வரை உள்ளதால் அதிமுக தொண்டர்கள் சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டனர்
ஆளும் கட்சி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்
கடந்த 26-3-2024 கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார்
ஆனால்?
வேட்பு மனு தாக்கல் செய்ய போகும் நான்கு நாட்களுக்கு முன்பு
22-3-2024 அன்றே தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் கலைஞர் அரங்கம் அருகே
தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் தலைமை தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது.
அதனால் மிகவும் சுறுசுறுப்பாக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் களத்தில் இறங்கி தினமும் தூத்துக்குடியில் உள்ள திமுக காரியாலயத்தில் சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்
தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு கடந்த 25-3-2024 ல் செய்தார்
இன்று தேதி 30-3-2024 ஜந்து நாட்கள் ஆகிவிட்டது
இன்னும் தூத்துக்குடியில் தேர்தல் காரியாலயம் திறக்கப்படவில்லை
தேர்தல் அதிகாரி கள் கெடுபிடி ஆவணங்கள் சமர்ப்பிப்பு காரணமாக இழுத்து கொண்டு இருக்கிறார்கள் இதற்கு யார் காரணம் என தெரியவில்லை என்கிறார்கள்
ஏற்கனவே கடந்த முன்று தடவைக்கு மேல் அதிமுக தேர்தல் காரியாலயம் பயன்படுத்திய இடமான தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் நீதிமன்றம் அருகே உள்ள தேவர் புரம் சாலையில் உள்ள இடத்தை தான் மீண்டும் தூத்துக்குடி அதிமுக வினர் கேட்டுள்ளார்கள்
காரியாலயம் திறக்க அனுமதி தாமதமாகி இன்னும் வருகிறது
காரியாலயம் இன்று வரை திறக்க ப்படாமல் தள்ளி போவதால் அதிமுகவினர் மத்தியில் என்ன நடக்கிறது ஏன் காரியாலயம் திறக்காமல் இருக்கிறார்கள்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு பதில் அளிக்க இயலாது புலம்பி வருகின்றனர்
இதுவே அதிமுக அதிகாரிகள் பிரச்சினை யாக உருவெடுக்காமல் இருந்தால் சரி!!!
கேட் கதவு பூட்டி உள்ள அதிமுக காரியாலயம் ( தூத்துக்குடி)
இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் சோர்வு ஏற்படுகிறது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக