thoothukudileaks 12-2-2024
Photo news by arunan journalist
தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தை கண்டித்து 12-2-2024 லிருந்து 13-2-2024 வரை இரண்டு நாள் விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்.
இது பற்றிய செய்தியாவது
தற்போது ஒன்றிய அரசு ஒன்றய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளபாரதிய நியாய சன்ஹிதா 202 3 பிரிவு 106/1 &2 -இன் தண்டனைகளை திரும்ப பெற கோரியும்
தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தை கண்டித்தும் ஏஜசிசிடியூ மற்றும் தூத்துக்குடி முத்து நகர் லாரி ஓட்டுநர் நல சங்கம் சார்பில் தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோயில்பிள்ளை நகர் பகுதியில் தூத்துக்குடி ஏஜசிசிடியூ
மாவட்ட தலைவர்
தோழர் சகாயம் தலைமையில் இன்று 12-2-2024 மாலை 5.மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஜசிசிடியூ தொழிற்சங்கம் மற்றும் தூத்துக்குடி முத்துநகர் லாரி ஓட்டுநர் நலச்சங்கம் இணைந்து வேலைக்கு செல்லாமல் இரண்டு நாள் 48 மணி நேர விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தில்... ஒன்றிய அரசு வ உ சி துறைமுக நிர்வாகத்தில் பாரதிய நியாய சன்ஹிதா 202 3 பிரிவு 106/1 &2 -இன் தண்டனைகளை திரும்ப பெற கோரியும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஓட்டுநர்களுக்கான அடிப்படைத் தேவைகளை ( உரிமை) நிறைவேற்றாத துறைமுகத்தை கண்டித்தும் ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம் மற்றும் தூத்துக்குடி முத்து நகர் லாரி ஓட்டுநர் நலச்சங்கம் கோரிக்கை கோஷம் எழுப்பப்பட்டது.
தலைமை தோழர் சகாயம் சிறப்புரை தோழர் சங்கர பாண்டியன் முன்னிலை எம் கே பரத் டி ஏ ஆனந்த் எஸ் தமிழ்ச்செல்வன் ஒய் அந்தோணி எஸ் அந்தோணி தோழர் முனியசாமி தோழர் நிஷாந்த் தோழர் முருகராஜ் தோழர் பேச்சுராஜ் தோழர் சிவராமன் தோழர் முருகன்
வழக்கறிஞர் தெர்மல் ராஜா மற்றும் ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம் மற்றும் தூத்துக்குடி முத்துநகர் லாரி ஓட்டுனர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
காவல்துறை குவிப்பு!!!
ஒன்றிய அரசு மற்றும் வஉசி துறை முகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றததால்.. பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை அதிகமாக வந்தியிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக