திங்கள், 12 பிப்ரவரி, 2024

தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு விடுத்துள்ளது

தூத்துக்குடியில் தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம் 

 மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தையும்,

தமிழ்நாடு அரசையும்  வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கை விடுத்துள்ளார்கள்



இது பற்றி தமிழர் விடியல் கட்சி விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற 14. 2 .2024 புதன்கிழமை மாலை 5.30  மணி அளவில் தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 


கோரிக்கைகள்!!!


1. 2023 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பெரும் மழையால் மிக கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. 


அந்த வெள்ளத்தில் உயிர்களும், உடைகளும் பறிபோயின. சரியான தீர்வை தமிழக அரசு பறிகொடுத்தவர்களுக்கு வழங்கவில்லை. உயிர்களை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அதிகரிக்க கோரியும், உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆய்வு செய்து நிவாரண தொகையை அதிகரிக்க கோரியும் ... 


2. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நெடுஞ்சாலை  மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த சாலையில் டிசம்பர் மாசம் பெய்த பெரும் மழையினால் சாலைகள் சிதிலமடைந்திருக்கிறது.


 இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இது மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றாக தெரியும். சாலைகளை சீரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.


 ஆகையால் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட பொதுமக்களை பாதுகாத்திட என்ற கோரிக்கையும் .... 


3. தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்பிக் உர தொழிற்சாலை இருக்கிறது. 


அந்த உரத் தொழிற்சாலைக்கு செல்கின்ற வாகனங்கள் முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் விபத்துகளை அதிகமாக ஏற்படுத்துகின்றன. 

சுமார் 100க்கும் மேற்பட்ட விபத்துக்கள் உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள்ளாக ஐந்து விபத்துக்கள் நடந்திருக்கிறது. 


அதில் ஒரு தாயும் 8  வயது மகனும் விபத்தால் பலியாய் இருக்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 


 இந்த சந்திப்பில் சிக்னல் ஒளிவிளக்குகள் , வேகத்தை குறைக்க வேகத்தடை இல்லாததாலும் விலையற்ற உயிரை பறிக்கின்ற விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.


 ஆகையால் பொதுமக்களை 

பாதுகாக்க, உயிர் இழப்பு ஏற்படுகின்ற விபத்துகளை தடுத்திடவும் போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் சமூகம் சார்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கும், 

தமிழ்நாடு அரசுக்கும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக