வியாழன், 14 டிசம்பர், 2023

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் புதிய அலுவலகம் திறப்பு எடப்பாடியார் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என பரபரப்பு

thoothukudileaks 14-12-2023

Photo news by sunmugasunthram journalist 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் புதிய அலுவலகம் திறப்பு எடப்பாடியார் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என பேசினார் 



இது பற்றிய செய்தியாவது:-

முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என பேசினார் 

அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 6வது தெருவில் அதிமுக புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. 


 மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். 



தூத்துக்குடி சண்முகபுரம் சேகரம் தூயபேதுரு ஆலய தலைமை குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக், குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி ஆகியோர் ஜெபம் செய்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். 

பின்னர் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில்:


 மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மூன்றாம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடுவோம்.


 அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எல்லா நன்மைகளும் திட்டங்களும் முறையாக கிடைத்தன.


 தற்போது விலைவாசி உயர்வு விண்ணை எட்டும் அளவிற்கு உள்ளது. எதிர்வரும் காலம் அதிமுகவின் காலமாக அமையும் என்று கூறினார். 

விழாவில், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பி.ஆர்.ராஜகோபால், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம்.ராஜாராம், ஆழ்வை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், காயல்பட்டிணம் முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராகிம், ஜெ.பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், கிழக்கு பகுதி அவைத்தலைவரும், பகுதி இளைஞரணி செயலாளருமான, வட்ட செயலாளர் புல்டன் ஜெசின், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சகாயராஜ், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், ஆர்.முருகன், ஜெயக்குமார், எம்.முருகன், ராஜ் குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக