ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா திருவிளக்கு பூஜை

thoothukudileaks 3-4-2023

செய்தி புகைப்படங்கள் 

சண்முகசுந்தரம்   



  தூத்துக்குடி கேவிகேநகர் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 28-3-2023ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்றது. 

கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

நேற்று( 2-4-2023 )இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும்....

கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



 

அதன் பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 இன்று (3.4.23) இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் குடி அழைப்பு விழா நடைபெறும்...

4ம் தேதி காலை தீர்த்தகரை செல்லுதல், மதியம் கொடை மற்றும் அன்னதானம், இரவு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர் சுற்றிவருதல், வில்லிசை கச்சேரி சாமக்கொடை நடைபெறும்....


 5ம் தேதி புதன்கிழமை காலை பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டு, மாலை முiளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெறுகிறது.




கோவில் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி உதவிபொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன், ஆறுமுகம், சங்கரநாராயணன், சண்முகராஜ், கலந்து கொள்கின்றனர்.

    கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துபாலகிருஷ்ணன், செயலாளர் சங்கர், பொருளாளர் கணேசன், துணை தர்மகர்த்தா முத்து கணேசன், துணை பொருளாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் மாநகராட்சி ஒப்பந்தகாரர் முருகன், ஆலோசகர்கள் முனீஸ்வரன், பட்டுராஜ், சாமித்துரை, வேலாயுதபுலவர், முருகன், திருமணி, கணக்கர், ராஜா, ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக