சனி, 20 மார்ச், 2021

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் இ.ஆ.ப. அறிவிப்பு!!!

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு,....தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் இ.ஆ.ப.  அறிவிப்பு செய்துள்ளார்.



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், தேர்தல்

செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால்

 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவினபார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 x 7 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல்

புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை

18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 மற்றும் 0461-2340101

என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

 மேற்கண்ட எண்கள் தவிர்த்து 9486454714 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 

பொதுமக்கள் அளித்திடும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 தேர்தல்கள் தொடர்பான புகார்களை 0461-2352990 என்ற எண்ணில் தேர்தல்

பார்வையாளர்களுக்கு நிகரி (FAX) மூலமாகவும் அனுப்பலாம். தேர்தல்

பார்வையாளர்களுக்கான கைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால்

தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம்.

என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்

டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக