செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் தூத்துக்குடி சண்முகபுரம் மக்களின் கோரிக்கை ஏற்பாரா? 18 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் காவல் நிலையம்!!!

 ,

தூத்துக்குடி

சண்முகபுரத்தில் எஸ்.ஐ. தலைமை  கொண்ட தனிப்பிரிவு காவல் நிலையம் அமைக்ககோரிக்கை வைத்து வருகின்றனர்



தூத்துக்குடி லீக்ஸ் 2021பிப்-16

      முதலமைச்சர் தனிப் பிரிவு உத்திரவுபடி தூத்துக்குடி சண்முகபுரத்தில் எஸ்.ஐ. தலைமை கொண்ட காவல் நிலையம் அமைக்க தூத்துக்குடி சமூக ஆர்வலர் பாலகிருட்டிணன் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  

       தூத்துக்குடியில் 1996ம் ஆண்டு ஏற்பட்ட ஜாதி மோதலை தொடர்ந்து அமைக்கப்பட்ட திருநாவுக்கரசு தனி நபர் விசாரனை குழு தாளமுத்துநகர், சண்முகபுரம் பகுதியில் காவல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்து பரிந்துரை செய்தது.

      தூத்துக்குடி  சமூக ஆர்வலர் மு.பாலகிருட்டிணன் சண்முகபுரம் பகுதியில் காவல் நிலையம் அமைக்க முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி இருந்தார்.

     இதையடுத்து அரசு இணை செயலாளர் சாஸ்தா குட்டி பிள்ளை நிதி பற்றாக்குறை காரணமாக சண்முகபுரத்தில புதிய காவல் நிலையம் அமைக்க இயலாது. எனினும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சண்முகபுரம் சட்டம், ஒழுங்கு பணிகளை கவனிக்க ஒரு எஸ்ஐ, 2 ஏட்டுகள், 9 காவலர்கள் பணியமர்த்தப்படுவர். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சட்டசபையில் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அரசு ஆனை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

அது தொடர்பான நாளிதழ் செய்தி



       தாளமுத்துநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக தூத்துக்குடி சண்முகபுரம் காவல் நிலையம் இதுவரை செயல்படவில்லை.

       தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் தூத்துக்குடி சண்முகபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று சண்முகபுரம் காவல் நிலையம் தனிப்பிரிவு செயல்பட நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

       இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக