நாம் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
இயற்கை வளங்களை பாதுகாக்க கலெக்டர் வலியுறுத்தல்!!!
மாணவர்கள் தண்ணீரை சேமிக்கவும் துணிப்பைகளைப் பயன்படுத்தவும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சமுக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டு தோறும் ஐந்து கிராமங்களைத் தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்தாண்டும் பழையகாயல் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம் நேற்று காலையில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூய மரியன்னை கல்லூரி பேராசிரியை அமோரா வரவேற்றார். முனைவர். குழந்தை தெரஸ், தூய மரியன்னை கல்லூரி உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் திட்டங்கள் பற்றிய அறிமுகம் செய்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பேசியதாவது : தண்ணீர் சேமிப்பும் பாரம்பரிய தண்ணீர் வளங்களான குளங்களை தூர்வாரும் நிகழ்வுகளும் இன்றைய இன்றியமையாத தேவைகளாகும். சுற்று சூழலை பாதுகாக்க நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
அனைவரும் மாற்று துணிப்பைகளை பயன்படுத்த
வேண்டும்.
தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு கலெக்டர் அவர்கள் துணிப்பைகளை வழங்கினார். பள்ளியில் மழைநீர் சேகரிப்பு புதுப்பிக்கப்பட்டதை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து மகளிர் மற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆங்கில மொழி பயிற்சி, மழை நீர் சேகரிப்பு பயிற்சி மற்றும் மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சியை அவர் தொடங்கி வைத்தார்.
பழைய காயல் அருட்தந்தை சகாய ராஜ்ராயன் ஆசியுரை வழங்கினார். திரு. கிரிதரன், சிவகாசி மாநகராட்சி தூதுவர், மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி செய்முறை பற்றி விளக்கினார். திரு.மாறன் இயற்கை வாழ்வியல் இயக்கம் பற்றி கருத்துரை வழங்கினார். தூய மரியன்னை கல்லூரி மற்றும் பழைய காயல் ஊராட்சி துறை விழாவின் ஏற்பாடுகளை செய்திருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக