தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் மதச்சார்பற்ற அரசியல் தலைவர், சுயநலமற்ற எதார்த்த மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக மாற்றுமத பண்டிகைகளுக்கு தொடர்ந்து வாழ்த்து சொல்வதும், மாற்று மத சம்பிரதாயங்களை மனமகிழ்ந்து ஏற்று அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஆனால்?
அதே முதல்வர், தேர்தல் அரசியலுக்காக இந்து கோவில்களில் தனக்கு திருநீறும்,குங்குமும் நெற்றியில் வைத்தால், உடனே அழிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா? என்பதை விளக்க வேண்டும்.
இன்று பசும்பொன் சென்று "தேசியமும் தெய்வீகமும் எனது இரு
கண்கள்" என முழங்கி, ஒழுக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்த ஆன்மீக அரசியல் இலக்கணமாக வாழ்ந்த அற்புதத் தலைவர் முத்துராமலிங்க தேவர் ஐயா நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.என்ற அர்ச்சகர் தேவர் ஐயாவிற்கு ஆரத்தி எடுத்த புனித திருநீறு
உள்ள பூஜை தட்டை முதல்வரிடம் இடம் நீட்டுவதற்கு முன் முதல்வருக்கு பின் இருந்த முதல்வரின் மனசாட்சி ஒருவர் கவனமாக திருநீறு தட்டை ஒதுக்கி வைக்கிறார். இது போன்ற நாடக அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுக என்கிற கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடு நிலைமையுடன் மத சம்பிரதாயங்களில இடையூறு செய்து மக்களின் மனதை புண்படுத்துவது போல் தன் கட்சியினர் நடந்த கொண்டால் கண்டிக்க வேண்டும் .
பாரத தேசம் செழிக்க, மக்கள் மகிழ, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அனுதினமும் தமிழக
திருக்கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அவமதிப்பது ஏன்? பக்தர்கள் மகிழ்வுடன், பக்தி பரவசத்துடன் அர்ச்சகர்களின் புனிதமான வாழ்வியல் அர்ப்பணிப்புக்கு மரியாதை செய்யும் விதமாக அர்ச்சகர்களின் தட்டுகளில்
பக்தர்கள் தாமாக முன்வந்து அன்புகாணிக்கை வழங்குவதை
தடுப்பதும் கொச்சைப்படுத்துவதும் நியாயமா?
கோவில்களில் ஆகம விதிகளின்படி நிர்வகித்து பூஜை செய்யும் அனைத்து அர்ச்சர்களுக்கும், கோவில்களை மேம்போக்காக மேலாண்மை செய்யும் அறநிலை துறை அதிகாரிகளுக்கு இணையாக, நியாயமான மாத ஊதியம், இறை சேவை தொகையாக
வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இதற்காக
உடனடியாக அர்ச்சகர் நலன் மேம்பாட்டு குழுவை தமிழக அரசு
உருவாக்கி அனைத்து அர்ச்சகர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மலர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி இந்து மதத்தை கொச்சைப்படுத்துவது, இந்து கடவுள்களை அவமதிப்பது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்பது மூலம் சிறுபான்மை வாக்கு வங்கியை கைப்பற்றலாம் என்கிற குறுகிய தேர்தல் தேர்தல் ஆதாய சிந்தனைக்கு முடிவு கட்டி,தமிழக முதல்வர் பரந்த மனப்பான்மையுடன் மாற்று மதத்தினர் பண்டிகைகளுக்கு மனம் குளிர வாழ்த்து சொல்வது போல், இந்து மதத்தின் அனைத்து பண்டிகைகளுக்கும் அதே உற்சாகத்துடன் வாழ்த்து சொல்ல வேண்டும் தற்போதாவது புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
நம்முடைய கலாச்சாரம் பண்பாடு, மனிதநேயம், அரசியல் நாகரீகம் பேணிக்காப்பதில் முதல் மனிதராக முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டும்.
இந்து மதத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் செயற்படும் போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்து கொள்ளும் பொழுதும்
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் சமயப் பெரியோர்கள் சுட்டிக் காட்டுவதும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆணவத்துடன் அகங்காரத்துடன் வாழ்த்து சொல்ல முடியாது என்கிற தொனியில் நடந்து கொண்டு மக்களை அவமதிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
மக்களின் முதல்வர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வாக்களித்தவர்கள் கோரிக்கைக்கும், வாக்களிக்காதவர்கள் கோரிக்கைக்கும் செவி சாய்ப்பேன், மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வேன் என்றெல்லாம் அரசு விழாக்களில் ஆர்ப்பரித்து தற்பெருமை பேசும் தமிழக முதல்வர் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் அடம்பிடிப்பது வரலாற்றுப் பிழையாகும்.
அனைத்து மதங்களை சார்ந்த உலக தலைவர்கள் எல்லாம் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா தொடங்கி, இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட தீபாவளி பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
ஆனால் உலகத்திற்கே வழிகாட்டும் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக தமிழக மக்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றும் திமுகவினர்
உலகின் அனைத்து
அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களை பல நூறு ஆண்டுகளாக
தன்னகத்தை இணைத்துக் கொண்டு
காத்து ரட்சிக்கும் தமிழன்னையின் பாதையைப் பின்பற்றி
பிற மதங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை,
இந்து மதத்திற்கும் அளித்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.
தொடர்ந்து இந்து மதத்தையும் தமிழக மக்களையும் அவமானப்படுத்துவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திறந்த மனதுடன், உள்ளன்புடன்,தமிழக மக்களின் இல்லமகிழ, உள்ளம் குளிர தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் முன்வர வேண்டும். மக்களின் முதல்வராக செயல்பட்டு, தான் மதச்சார்பற்ற அரசியல் தலைவர், சுயநலமற்ற எதார்த்த மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டும்
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக