தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியால் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு, மணல், கொள்ளை போதை கலாச்சாரம், தொடர் கொலைகள், அரசியல் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஆசிரியர் மருத்துவர் அரசு ஊழியர்கள் முதல்
பல்வேறு தொழிற்சங்கத்தினரின் தொடர் போராட்டங்கள் என தமிழகமே மக்கள் எதிர்ப்புலையில் போராட்ட களமாக இருக்கும் சூழ்நிலையில் அது திசை திருப்புவதற்காக திமுகவும் திருமாவளவன் அவர்களும் நடத்தும் நாடகமா? என்ற கேள்வியும் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்களாக ஆட்சியில் பங்கு என்ற தொனியில்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு கருத்துருவாக்கத்தை
உருவாக்கி புதிதாக தன் கட்சியில் இணைத்துக் கொண்ட ஒரு தொழிலதிபரின்
ஆசை வார்த்தைகளால்
கவரப்பட்டு, அதன் அடிப்படையில் மனதின் குரலாகவும், அட்மின் குரலாகவும் ஊடகங்களில் பொய் பிம்பங்களை உருவாக்கி பரப்பி வருகிறார்.
.
தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து, இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களின் உயிர்களை கொல்வதற்கு காரணமாக இருந்து மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்
திமுக குடும்பத்தினரின் நன்மைக்காக மட்டுமே பங்கு பெற்று உலகமே கண்டிராத ஊழல் வரலாற்றை உருவாக்கி, தமிழகத்தில் மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் இடம் தராமல் அதிகார பசியோடு இருக்கும் எண்ணில் அடங்காத
தவறுகள் செய்து வரும் திமுக ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக முடிவு கட்டும்.
ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லாத, பிற்போக்குத்தனமான,
அரசியலும் அதிகாரமும் தன் குடும்பச் சொத்து என்பதை தொடர்ந்து நிரூபித்து வந்துள்ள வாரிசு கட்சி திமுக என்பதை நன்கு உணர்ந்தும், தேர்தல்
கூட்டணி பேரத்தில் அமைதியாக இருந்து இருந்துவிட்டு, இன்று சீட்டு வாங்கி ஜெயித்தவுடன் தற்போது இல்லாத உரிமைக்கு, இது கட்சியின் ஆசை ,
கடந்த கால திட்டம் எதிர்கால லட்சியம்
என்று பேசி வருவது
உண்மையா? என்ற சந்தேக கேள்வி
அனைவரும் மனதிலும்
எழுந்துள்ளது.
மறுப்பு க்கு பின் உங்களால் என்ன செய்ய முடியும்?
திருமாவளவன் அவர்களே! இரண்டு திராவிட கட்சிகளுமே கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை என்று மறுத்து விட்டது.
இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இந்திய மக்களின் மகிழ்ச்சிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக வறுமையை ஒழிப்போம்! ஊழலை ஒழிப்போம்!
உலகின் வளமான வலிமையான வல்லரசாக இந்தியாவை உருவாக்குவோம்! என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக முறைப்படி ஒருமித்த கொள்கையுடன் அமைத்த கூட்டணி மூன்றாவது முறை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது.
பாஜக கூட்டணி கட்சிகள்
மத்திய அமைச்சரவில் அனைத்து கூட்டணி கட்சிகளின் பங்கு இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவரவர் வலிமைக்கேற்ப சமமான முறையில் அமைச்சரவையிலே இடமளித்து முக்கிய இலாகாக்களை ஒதுக்கி பாஜக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார்.
மத்திய மோடி அரசு கூட்டணி ஆட்சிக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.
குழம்ப வேண்டாம்!!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
துணிந்து கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான்,
இனி உறவு இனி தேர்தல் கூட்டணி என்று துணிந்து அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் வழக்கம் போல தன்னுடைய சுயநல அரசியலுக்காக,
குரலை உயர்த்தாமல், நிறத்தையும் மாற்றிக்கொண்டு, குணத்தையும் மாற்றிக் கொண்டு, சொன்ன வார்த்தைகளையும் மாற்றிக்கொண்டு
தற்போது நிலையிலே தொடரட்டும்.
கோடிக்கணக்கில் தனக்கு செலவு செய்ய ஒரு ஸ்பான்சர் கிடைத்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது வார்ரூம் அதிகமாகி விட்டதால்
புதிய செய்திகளை பரப்பி தங்களையும் குழப்பிக்கொண்டு அனைவரையும் குழப்ப
முயற்சிக்க வேண்டாம்.
பாராளுமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சியோடு நடந்த தேர்தல் கூட்டணி குறித்த பேரத்தின் போது, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எங்களுடைய கூட்டணி கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்றீர்கள் எங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆட்சியில் பங்கு கொடுங்கள் என்று துணிந்து நீங்கள் கேட்டிருந்தால் அது ஒரு நியாயமான அரசியலாக இன்று மக்கள் பார்ப்பார்கள்.
ஆனால் ஆட்சியில் அதிகாரம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல்,
தங்களோடு இணைந்த அந்த செல்வந்தரின் சீட்டுக்காக வலிமையோடு நீங்கள் பேசிய பேரம் தான் இப்போது அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை பட்டியலின மக்களுக்கு என்ன செய்துள்ளது?
பட்டியலின மக்கள் வசிக்கும் எத்தனை கிராமங்களில்
அவர்களுக்காக மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
பிரதமர் மோடி
பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் வழியில் ஆட்சி நடத்தக்கூடிய பிரதமர் மோடியை பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தி
அண்ணல் அம்பேத்கர் கனவை நனவாக்கி. வருகிறார்.
தமிழகத்தில் மத்திய அமைச்சர் முருகன் தொடங்கி 10எஸ்சி, 05எஸ்டி பிரிவு அமைச்சர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்பட்டு தேசத்தின் வளர்ச்சிக்கு தங்களுடைய முழுமையான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
பாஜக கட்சியின் நரேந்திர மோடி அரசின்
நேர்மையான ஆட்சி, அதிகார பகிர்வுக்கு
இந்தியாவை அலங்கரித்த பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த இரண்டு குடியரசுத் தலைவர்களே
சான்று என்பதையும் தங்களுக்கு பெருமையுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்
எனவே இந்தியாவில் ஜனநாயகத்தை போற்றி பாதுகாத்து , கூட்டணி கட்சிகளுக்கு நியாயமான உரிமைகளை வழங்கி சிறந்த ஜனநாயக அரசாக மத்திய அரசும், அரசியல் தோழமைக்கு இலக்கணமாக
பாரதிய ஜனதா கட்சியும் விளங்கி வருகிறது.
திமுக அரசின் தவறுகளை சுட்டி காட்டுங்கள்"
தமிழகத்தில் திமுக அரசின் அவலத்தால், வாரிசு அரசியலும், ஊழல் அரசியலும், வகுப்புவாத, பிரிவினைவாத, மதவாத அரசியலும் தலைதூக்கி, மக்கள் நலம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை திருமாவளவன் உணர்ந்து, கண்ணியமிக்க சட்டமன்ற உறுப்பினராக
மக்களைத் திரட்டி திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி போராடி, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
மது விலக்கு
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் பாஜகவும், பாமகவும் நீண்ட காலமாக தன்முனைப்புடன் மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் போராட்டங்களையும்
நடத்தி வந்துள்ளது.
இது ஏன்?
இன்று பாஜக மற்றும் பாமக கட்சிகள் இல்லாமல் மதுவிலக்கு ஆதரவு மாநாடு நடத்துவேன் என்று கூறியதில் இருந்து உங்களின் சுயநல அரசியலும் உள்நோக்கமும் அனைவருக்கும் புரிந்து விட்டது.
நீங்கள் மதுவிலக்கு கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தேடுவதற்கு
மடைமாற்றம் செய்ய
பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும்.
திருமாவளவன் அவர்களே நீங்களும் மக்கள் விரோத திமுக அரசை தமிழகத்தில் அகற்றுவோம் என்று அறிவியுங்கள்.
தமிழக மக்கள் உங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தை தானாக தருவார்கள்.
இணையுங்கள்!!!
அதைவிடுத்து அரசியல் நாடகங்களை நடத்தாமல் , தமிழக நலனில் அக்கறையுடன்
செயல்படும் கட்சிகளோடு இணைந்து செயல்படுங்கள்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக