ஞாயிறு, 28 ஜூலை, 2024

ஹிட்லர் ஆட்சியாக மாறி வரும் திராவிட மாடல் ஆட்சி !!! இந்துக்களின் உரிமையையும் உண்மையையும் பேசினால் காவல்துறை கைது செய்யத் துடிப்பது ஏன்? தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் ஒன்பது பேர் மீது திட்டமிட்ட பொய் வழக்கு தமிழக காவல்துறை கைது செய்து வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை .


ஹிட்லர் ஆட்சியாக மாறி வரும் திராவிட மாடல் ஆட்சி



இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் விமர்சித்தால் கண்,காது, வாய் பொத்தி ஏவல் செய்யும் திராவிட மாடல் காவல்துறை, இந்துக்களின் உரிமையையும், நடைபெற்ற உண்மையையும் பேசினால் கைதா ? திராவிட மாடல் காவல்துறை செய்யத் துடிப்பது ஏன்? 



தமிழக அரசின்..

அன்னை தங்கம்மாள் நினைவேந்தல் கைது நடவடிக்கை 

கடும் கண்டனம் !

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் 

 அவர் பாரத தாய் திருநாட்டின் ஒற்றுமைக்கும், வலிமைக்கும் பாடுபட்டவர் .

அவரை....

பிரிவினைவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்கு மதவாதத்திற்கும் எதிராக செயல்பட்டதாக தமிழக அரசு கைது செய்துள்ளனர் 

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் முலம் அனுமதி பெற்ற அன்னை தங்கம்மாள் நினைவேந்தல் நிகழ்வு

 உண்மை வரலாற்றை பேசிய நினைவேந்தல் கூட்டம்!!

தன் இன்னுயிரை இழந்த அன்னை தங்கம்மம்மாள் நினைவேந்தல் கூட்டத்தில்...,

 தங்கம்மாள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றையும், படுகொலைக்கு காரணமாக இருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலரையும் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குறிப்பிட்டு பேசினார். 


ஒவ்வொரு ஆண்டும் நாகப்பட்டினத்தில் ..

இந்த கூட்டம் நடக்கும் பொழுது விடியாத திராவிடம் மாடல் அரசுகள், இந்துக்களின் ஒற்றுமையை தடுக்க, மதவாத சக்திகளுக்கு துணை நிற்க நினைவுகள் கூட்டத்திற்கு தடை விதிப்பர். 

தடைகளை மீறி நினைவேந்தல் கூட்டம் நடந்து வருவது உண்டு.


திராவிட மாடல் அனுமதி மறுப்பும்!!! 

உயர் நீதிமன்றம் அனுமதி உத்தரவு!!!

இந்த ஆண்டும் காவல்துறை பல்வேறு பொய் காரணங்களை கூறி படுகொலை செய்யப்பட்ட பலியான அன்னை தங்கம்மாள் நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். 


இந்த கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தி வரும் 

அன்னை தங்கம்மாள் அவரின் கணவர் முத்துகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தை நாடி,உயர் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கி கூட்டம் நடத்தப்பட்டது. 

தீவிரவாதிகளால் படுகொலை !

இந்த கூட்டத்தில் ..

1995- ம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி பார்சல் வெடிகுண்டு வாயிலாக 

மிக பயங்கரமான முறையில் அன்னை தங்கம்மாள் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலையையும் தமிழகத்தில் இந்து இயக்கங்கள் மீது நடந்த தொடர் தாக்குதல்கள் படுகொலைகள் குறித்தும் பேச்சாளர்கள் பேசினர்.


தங்கம்மாள் கொலையில் வெடிகுண்டு பார்சலை அனுப்பியது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் நடந்த உண்மைகளை மையமாக வைத்து உள்நோக்கம் இல்லாமல் பேசிய தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவரை கைது செய்ய தமிழக காவல்துறை முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. 

காவல்துறை தேடல்!

மேலும் அவரோடு அந்த கூட்டத்தில் பேசிய இந்து இயக்கத் தலைவர்கள் 9 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்ய தீவிரமாக தேடி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.


பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், 

இந்து இயக்கங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்நோக்கம் இல்லாமல் உண்மையை உரத்த குரலில் பேசினால், மதஉணர்வை தூண்டும் பேச்சு என்றும்....!

 மனிதாபிமானம் இல்லாமல், கற்பனையான வழக்குகளை ஜோடித்து கைது செய்ய திமுக அரசின் காவல்துறை துடிக்கிறது. 


ஆனால் ?

இந்து கடவுள்களை அப்பன் முருகன்,ஆதி பகவன் சிவபெருமான், பாரதத்தின் தலைமகனாக போற்றி வணங்கக் கூடிய இறைவன் ராமர் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும்,

இந்துக்கள் வணங்கி மகிழும் கோவில்களையும் கோவில் சிற்பங்களையும், உலகத்துக்கே வழிகாட்டிய இந்து  மதத்தையும், ஆபாச வார்த்தைகளால் அருவருக்கதக்க பேச்சுக்களால் கொச்சைப்படுத்திய தனி நபர்கள் இயக்கங்கள்,  அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் மத உணர்வை தூண்டு வகையில் பேசிய போது திராவிட மாடல் அரசு கைகட்டி, வாய் புத்தி மௌனமாக ரசித்தது ஏன்?


தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை நிர்வாகிகளை தலைவர்களை தொடர்ந்து குறி வைத்து தொடர்ந்து தமிழக காவல்துறை கைது செய்து வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. 


*திமுக அரசும், தமிழக காவல்துறையும் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அடக்கு முறையை ஏவி விட்டாலும் கைது படலத்தை தொடர்ந்தாலும் எங்களுடைய நேர்மையான உண்மையான நியாயமான கருத்துக்களை நாங்கள் தொடர்ந்து பேசுவோம்*. 


*தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் ஒற்றுமைக்காகவும் பாரதத்தின் வலிமைக்காகவும், இந்து இயக்கங்களின் மீது நடைபெறும் தொடர் தாக்குதலுக்காகவும் அனைத்து விதமான எதிர்ப்பையும் நாங்கள் ஜனநாயக ரீதியில் தெரிவிப்போம். எதிர் கொள்வோம்*.


தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்து மக்களை மீண்டும் மீண்டும் மனம் நோகும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இயக்கங்கள் நபர்களை அடையாளம் காண வேண்டும். 

 இந்து மதத்திற்கு எதிராக இந்து கடவுள்களுக்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் ஆபாச பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.


தமிழக முதல்வர் அவர்கள் நாகப்பட்டினத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அன்னை தங்கம்மாள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் போடப்பட்ட திட்டமிட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற முற்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏ.என்.எஸ் பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக