▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂11 - 3 - 2024
photo news by:-
Arunan Journalist
இதுவரை எதுவும் கண்டு கொள்ளாத தமிழக அரசிடம் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு நியாயமான புதிய ஊதிய உயர்வு உட்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இது பற்றிய செய்தியாவது:-
தமிழகம் முழுவதும் 4500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு
கடன் சங்கங்கள் கிராமப்புறங்களில் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இவைகளால் நடத்தப்படும் 33700 கிராம அங்காடிகளில் சுமார்
30000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நியாயமான புதிய ஊதிய உயர்வு உட்பட 12 கோரிக்கைகளை
பதிவாளாருக்கு
பல கடிதங்களும் அதன்மீது பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடந்தேறிய
நிலையில் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் இன்று அரசின் கவனத்தை
ஈர்க்கும் வகையில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகள் வலியுறுத்தி
ஆர்ப்பார்ட்டம் நடத்திட மாநில சங்கம் அறிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தலைநகரங்களில் இன்று 12.கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
மாவட்டத்தில் இன்று (11.03.2024)
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்ஸ்டாப் (மையவாடி எதிர்புறம்) மாவட்ட தலைவர் ச.பாலமுருகன்
தலைமையிலும், மாவட்ட
பொருளாளர்
செ.கணேசன் முன்னிலையிலும், கௌரவ
பொதுசெயலாளர் டாக்சிரியா மாவட்ட செயலாளர் .மா.ஜேசுராஜன் சிறப்புரையுடன்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டததில் துணைத்தலைவர்கள்
அ.பெனிஸ்கர், ஜீ.தம்பிராஜ், ஒன்றிய நிர்வாகிகள் குமார், சுப்பிரமணியன், சுப்பையா, கணபதி
மல்லு, குமரேசன், எட்வின், கென்னடி, ஐவகர், கோபாலகிருஷ்ணன், ஆறுமுகபாண்டி, ஆறுமுகம்,
வீரப்பன், நாகமணி, கிருபா,ஜெயக்குமார்,ஸ்ரீதேவ், திருமணிதங்கம், டாக்சிரியா ஓய்வு பெற்றோர் நல
சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உட்பட 300-க்கும் மேற் டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக