செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுக்கும் பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு.

thoothukudileaks 6-2-2024



 மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் என்று தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பரபரப்பு பேச்சு.


இது பற்றிய செய்தியாவது:-

திருநெல்வேலி நேருஜி கலையரங்கத்தில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து அதிமுக ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் இன்று 6.2.2024 தூத்துக்குடி பானு பிருந்தாவன் திருமண ஹாலில் வைத்து நடைபெற்றது.



இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-


 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் யாரை நிறுத்தினாலும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். திமுக பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்கியது என்றார். குறிப்பாக நீட், கல்வி கட்டணம் ஆகியவற்றை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். 

மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம் மீண்டும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.


இக்கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, பொறுப்பாளர் சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், காசிராஜன், செம்பூர் ராஜ் நாராயணன், சௌந்தரபாண்டி, தாமோதரன், நகர செயலாளர்கள் மகேந்திரன்,  காயல் மௌலானா,  பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் செந்தமிழ் சேகர், கோபாலகிருஷ்ணன், ஆறுமுக நயினார், செந்தில் ராஜ்குமார், குமரகுருபரன், அசோக் குமார், துரைசாமி ராஜா,  சோமசுந்தரம், கிங்ஸ்லி,  மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், சுதர்சன் ராஜா, அருண் ஜெபக்குமார், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், முனியசாமி, ரவிந்திரன், ஏ.ஆர். இளங்கோ,  நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், உரக்கடை குணசேகரன், பூந்தோட்டம் மனோகரன், சுரேஷ் பாபு,  ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், எம்.பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றி செல்வன், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேணன், ஒன்றிய துணை சேர்மன் அப்பாதுரை, முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகனேரி அரசகுரு,  சின்னத்துரை, பள்ளக்குறிச்சி கார்த்திசன், பால் துரை, செந்தில், திருச்செந்தூர் மகாலிங்கம், வினோத், பட்டணம் சுரேஷ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்வி குமார்,  ஆனந்தராஜ், உடன்குடி அமிர்தா மகேந்திரன், ராஜ்குமார், ராம்குமார், ரங்கன், தலைமைக் கழக பேச்சாளர்கள் முருகானந்தம்,  பொன் ஸ்ரீராம், ஏகே மைதீன், பிராங்கிளின் ஜோஸ், வர்த்தக அணி சுகுமார், வட்டச் செயலாளர்கள் மனுவேல்ராஜ், வெங்கடேஷ், சொக்கலிங்கம், அருண் ராஜா, கொம்பையா,  பிரபாகர், உலகநாத பெருமாள்,  முருகேசன், நவ்ஷாத், ஜெயக்குமார், ரெங்கன், சுப்பிரமணிய பாண்டி, ஈஸ்வரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, யோவான், மதன் செல்வகுமார், ஜெயமுருகன், நிலச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பாலஜெயம், சாம்ராஜ், தளவாய் ராஜ், திலகர், சகாயராஜா, வக்கீல் ராஜ்குமார்,  மகளிர்கள் நாசரேத் ஜூலியட், ராஜேஸ்வரி, இந்திரா, முத்துலட்சுமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 



தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் கோரிக்கையாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வக்கீல் செங்குட்டுவன் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதனிடம்  மனுவாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக