சனி, 3 பிப்ரவரி, 2024

மாடுகள் சிறைப்பிடிப்பு? போக்குவரத்து இடையுறாக சாலையில் மாடுகள்!!! தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!!! மாடுகளின்உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார், இ. ஆ.ப அறிவிப்பு

thoothukudileaks 3-2-2024

photo news by arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில்  போக்குவரத்து இடையுறாக விபத்து ஏற்படும் சூழலில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க ப்படும் அந்த மாடுகளின்உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ் குமார், இ. ஆ.ப அறிவிப்பு   செய்துள்ளார்.





தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றி திரிந்தனர் .

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்பகுதி யில்...


இன்று 3-2-2024 

தூத்துக்குடியில் 18 மாடுகள் மற்றும் 9 கன்றுக்குட்டிகள் மாநகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


மேலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சுற்றி தெரியும் கால்நடைகள் பிடிக்கப்படும் நிகழ்வானது தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.



 எனவே, கால்நடைகளை வளர்ப்போர் முறையாக அதற்கான கொட்டில் அமைத்து வளர்த்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது 


தவறும் நிலையில் பிடிக்கப்படும் கால்நடைகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ் குமார், இ. ஆ.ப தெரிவித்துள்ளார்கள்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில்... போக்குவரத்து இடையுறாக நடமாடும் மாடுகள் 

video thoothukudi new busstand 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக