வியாழன், 1 பிப்ரவரி, 2024

மாட்டு தொழுவத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் காவல்துறை சோதனையில் இருவர் கைது !!! தூத்துக்குடி காவல்துறை அதிரடி!!!

thoothukudileaks 02.02.2024


தூத்துக்குடியில் மாட்டு தொழுவத்தில் ...தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் மற்றும் புகையிலை பதுக்கலில் ஈடுபட்ட இருவர் கைது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர் .

மாட்டு தொழுவத்தில் அகப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை 


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன்  உத்தரவின்படி 

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தடுக்க  தனிப்படை அமைக்கப்பட்டது 


 தூத்துக்குடி தாளமுத்துநகர் மற்றும வடபாகம்  காவல் நிலைய பகுதியில் நேற்று ரோந்து  பணியில் ஈடுபட்டார்கள்.



ஆய்வாளர் ஆதாம் அலி மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர்  மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்  மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  சாமுவேல், காவலர்   முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (01.02.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகரை சேர்ந்த ஜோசப்செல்வராஜ் மகன் அந்தோணிமுத்து (52) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அந்தோனி முத்து 


உடனே மேற்படி போலீசார் எதிரி அந்தோணிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 4,38,935/-  மதிப்புள்ள 409 கிலோ புகையிலை பொருட்களையும்  பறிமுதல் செய்தனர்.


 மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்து வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த எதிரி கைது - ரூபாய் 19,000/- மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி தூத்துக்குடி நகர  உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர்  மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்  மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்  திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (01.02.2024) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் ...

கந்தசாமி 


அவர் தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் கந்தசாமி (41) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.



உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி கந்தசாமியை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 19,000/- மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி கந்தசாமி மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக