சனி, 20 ஜனவரி, 2024

மீனவர்களை புகழ்ந்து பேசிய கனிமொழி எம்பி

thoothukudileaks 20-1-2024

Photo news by sunmugasunthram 

கனமழை வெள்ளப் பாதிப்பின் போது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர்கள் மீனவர்கள் தான் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பாராட்டினார்.



      தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட 2023 வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தனியார் திருமன மண்டபத்தில் நடைபெற்ற  பாராட்டு விழா தூத்துக்குடியில் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.




    தூத்துக்குடி திருநெல்வேலி ராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கி கனிமொழி எம்.பி பேசியதாவது ...


நீங்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து பணி செய்தமைக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.


 எல்லோருக்கும் உதவிகரம் நீட்டி ஓடோடி வந்து பணி செய்துள்ளீர்கள்.


 மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கருத்தில் கொண்டு அந்த பணியை செய்வதற்கு புன்னகையோடு வந்ததை எண்ணி  எல்லோரும் மகிழ்கிறோம்.


 உங்களிடமோ சில கருத்து வேறுபாடுகள் இருப்பதுண்டு அதையெல்லாம் மறந்து மனித நேயம் தலைதோங்கும் வகையில் மனித நேயத்தோடு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பணி செய்த மீனவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது. 



பெய்த கன மழை வெள்ளத்தின் போது பல பகுதிகளுக்கு அமைச்சரோடு சென்ற போது சில பகுதிகளில் தண்ணீரின் அளவு அதிக அளவு வந்து கொண்டிருந்தது. 


அந்த பகுதியில் நாம் செல்லமுடியுமா என்று எண்ணிய போது கயிறு கட்டிக்கொண்டு அதை பிடித்துக்கொண்டும் சில பகுதிகளுக்கும் சென்று மக்கள் நலன் தான் என்று பணி செய்தோம் .


இந்த காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் கலெக்டர் அதிகாரிகள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் மேயர் என அனைவருமே களப்பணியில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி பணியாற்றினோம்.


 அதில் பலர் மொட்டை மாடியில் இருந்து சில நாட்களாக வாழ்ந்தனர். எல்லோருக்கும் தேவையான முதல்கட்ட பணியான தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அனைத்து பங்களிப்புகளை மேற்கொண்டோம்.


 இதில் குறிப்பாக அனைவரும் தமிழர்களாக இருந்து விருப்பு வெறுப்புகளை கடந்து பணியாற்றியது தான் மிகப்பெரிய சாதனை அதிலும் எவ்வீத எதிர்பார்ப்பு இன்றி உணவுகளை கூட உட்கொள்ளாமல் பணி செய்த மீனவர்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்கள் என்று பேசினார். 


தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள பாதிப்பின் போது 183 படகுகள் 68 பரிசல்கள் இயக்கப்பட்டு 700 மீனவர்கள் முழுமையாக பணியாற்றினார்கள். 


 இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் கீதாஜீவன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, எம்எல்ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு அருட்திரு பென்சிகர், 

 மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்பிடித்துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் விஜயராகவன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், ஜோஸ், தமிழ்நாடு நாட்டுப்படகு சங்க தலைவர் வக்கீல் கயஸ், தமிழ்நாடு நாட்டுப்படகு சங்க ஓருங்கிணைப்பாளர் ராஜாபோஸ்ரீகன், அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் வக்கீல் ரகுராமன், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், தலைவர் வேலம்மாள், மகளிர் அணி மெர்சி லினி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான வீரபாகு, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ராஜாஸ்டாலின், அமலிநகர் சந்திரன், வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், குமரன், வட்டச்செயலாளர்கள் ராஜாமணி, சுரேஷ், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மீனவர் சங்கத்தை சேர்ந்த பாக்கியராஜ், ஜெகதாபட்டிணம் நகர்மன்ற துணைத்தலைவர் ரவி பெர்னான்டோ, தமிழ்நாடு மாநில மீனவர் நலவாரிய துணை தலைவர் சாஜீதீன், மற்றும் அல்பட், மகேஸ்வரசிங், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி முடிவில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ராசப்னம், நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக