சனி, 23 டிசம்பர், 2023

கனமழை தூத்துக்குடி மக்களுக்கு 4 நாட்களாக தொடர்ந்து உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கல். பாதிப்பு நீங்கும் வரை தொடர்ச்சியாக இவை வழங்கப்படும் என்று அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்..

தூத்துக்குடி மக்களுக்குகடந்த நாட்களாக  உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கி வருகிறார்

முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அவரது பார்வையில் வீட்டில் உணவு தயாரிப்பு 


இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க 4 நாட்களாக வீட்டில் உணவு தயாரித்து உணவு மற்றும் போர்வை, பாய், லுங்கி போன்ற பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கி வருகிறார் 


தூத்துக்குடி தொகுதியில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஸ்டேட் பாங்க் காலணி, ஆதிபராசக்திநகர், சிதம்பரநகர், அண்ணாநகர், மகிழ்ச்சிபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 4 நாட்களாக வீட்டில் பணியாளர்கள் மூலம் அண்டாவில் சமையல் செய்து சாம்பார் சாதம், லெமன்சாதம், தக்காளிசாதம், உள்ளிட்ட 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வரை தயாரித்து 4 நாளில் 16 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலம், போர்வை, பாய், லுங்கி, துண்டு, பிஸ்கட், தண்ணீர்பாட்டில், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார். பாதிப்பு நீங்கும் வரை தொடர்ச்சியாக இவை வழங்கப்படும் என்று அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.



     மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் மாநகாட்சி கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், அருண்குமார், அவைத்தலைவர் வக்கீல் குமார், மாவட்;ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஞானபுஷ்பம், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், முன்னாள் வட்டசெயலாளர் அசோகன் உள்பட பலர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக