தூத்துக்குடியில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் அமைச்சர் கீதாஜீவன் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டு முறையிட்டவர்களுக்கும், தகுதியான அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாநில திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: -
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்டத்தில் ஏற்கனவே தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள அனைத்து முதியோர்கள் மற்றும் பல இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளன.
அரசுமருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு
தங்க மோதிரம் வழங்கியுள்ளோம்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு எல்லாத்துறைகளிலும் முதலமைச்சர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.
உங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நலன்களிலும் அக்கறை கொண்டு இலவச பேருந்து பயணம்,மகளிர் உரிமைத்தொகை
1000 வழங்கப்படுகிறது.
இந்த தொகை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் விடுபட்டு முறையிட்டவர்களுக்கும், தகுதியான அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
கடந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற வெள்ளப் பாதிப்பின் போதும், தற்போது ஏற்பட்ட பாதிப்பின் போதும், அமைச்சர் உதயநிதி அனைத்து பகுதிகளுக்கும் சென்று நலத்திட்டங்கள் வழங்கி அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் தான் ரூ.1000 வழங்கப்படுகிறது.
வரும் 18ம் தேதி மக்களுடன் முதல்வர் கோயம்புத்தூரில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாநகரில் 37 இடங்களில் விடுமுறை தவிர்த்து அடுத்த வருடம் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், உங்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா மற்றும் மாறுதல், குடிநீர் இணைப்பு, மின்கம்பம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை மனுக்கள் மூலமாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் முகாமில் கொடுத்து அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களிடமும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.
எல்லா பகுதிகளிலும் எங்களுடைய கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்து உங்களுக்கு உதவிபுரிவார்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார்.
பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர துணை செயலாளர் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்;நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், விஜயக்குமார், வைதேகி, பவானி மார்ஷல், சுப்புலெட்சுமி, நாகேஸ்வரி, விஜயலெட்சுமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தனலெட்சுமி, தெய்வேந்திரன், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், மனோ, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, மகேஸ்வரன்சிங், அல்பட், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக