தூத்துக்குடி லீக்ஸ்:-20-7-2023
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு&வடக்கு மாவட்ட அதிமுக ஆர்ப்பார்ட்டம்
தக்காளி வெங்காயம் விலை உயர்வு திமுக அரசை கண்டித்து அதிமுக தூத்துக்குடி யில் ஆர்ப்பாட்டம் |
உணவு பொருட்களின விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாத திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின் பேரில் இன்று அதிமுகவினர் (20-7-2023) ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத் த தவறிய திமுக அரசை கண்டித்தும் அனைத்து துறையிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கண்டித்தும் இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் முக ஸ்டாலினை இருந்து வருகிறார் என தூத்துக்குடி தெற்கு & வடக்கு அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் சார்பாக இன்று தூத்துக்குடி 12-வது வாசல் மையவாடி எதிர்புரம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில்
எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-
பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத் த முடியல வெறும் பொம்மை முதல்மைச்சராக தான் முக ஸ்டாலின் இருக்காரு?
இவரது அக்கா இல்ல தங்கச்சி கனிமொழி எம்பி. உருப்படியாக எந்த திட்டமும் கொண்டு வரல." ஒட்டு கேட்க வந்தாங்க இப்ப எங்கயாவது கனிமொழியை பாத்தீங்களா?
அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் எடப்பாடி அரசு கொண்டுவந்த
1500 கோடி ஸ்மார்ட சிட்டி திடடம் கொண்டுவந்தாங்க
இன்றைக்கு
அக்கா தம்பி யால் தூத்துக்குடி மாநகராட்சி சீரழிஞ்சி கிடக்குது
ஒரு நாள கல் வெட்டு வைக்கிறாங்க மறுநாள வேறு வைக்கிறாங்க"தினமலர் பேப்பரில் போட்டு நாறுவதை நீங்களே பாக்கிறீர்கள்
தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் அப்படின்னா மற்ற வங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு அனைத்து ரேசன் கார்டு உள்ளவங்க குடும்ப தலைவிக்கும் ஆயிரம் கொடுக்கனும் இதுதான் எடப்பாடி பழனிச்சாமி சொல்றாரு என்றார்.
திமுக
தேர்தல் வாக்குறுதி கொடுத்த மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் சொன்னாங்க..சொன்னபடி செஞ்சாங்களா?இன்ன வரைக்குக்கும் ஒரு பய வாயே திறக்க மாட்டான். பெற்றோர்களும் மாணவர்களும் கஷ்டப்படுறாங்க இவ்வாறு பேசினார்.எஸ்.பி.சண்முகநாதன்
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக