தூத்துக்குடி லீக்ஸ் 20-7-2023
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மரக்கன்று நடும் ஒப்பந்த படிவம் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாக்கும் வகையில் உலக வெப்பமயத்தை குறைக்கும் வகையிலும் 60 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வசதி வாய்ப்புகள் உள்ள இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி மரம் நடுவோம் மழை வளம் பெருவோம் மக்கள் நலன் காப்போம். என்ற அடிப்படையில் மாநகராட்சி சார்பில் தருவைகுளம் குப்பை சேமிப்பு பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
தனியார் பங்களிப்போடு 3ம் மைல் பாலம் அருகில் உள்ள இந்திராநகர் சங்கர் காலணி பகுதியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
அதே போல் மாநகர பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் அதன் தன்மைக்கேற்ப பல்வேறு வகையான செடிகள் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக பதவியேற்ற ஓராண்டினை முன்னிட்டும் 70000 மரங்கள் நடப்படும் என்று அறிவித்ததின்படி முதற்கட்டமாக மார்ச் 4ம் தேதி 11,000 மரங்கள் நட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து 7,000க்கும் அதிகமான மரங்கள் நடும் பணிகளானது ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
தற்போது அந்த பகுதியில் மேலும் 66000 மரங்கள் தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையமும் இணைந்து நட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஓப்பந்த படிவத்தை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வனத்துறை அதிகாரி அபிஷேக் தோமர், உள்ளிட்ட அலுவலர்கள் வழங்கினார்கள்.
பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கந்தசாமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக