thoothukudi leaks 31-7-2023
செய்தி புகைப்படங்கள்
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி கொடுக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசமாக பேசினார் .
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட திமுக தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஓருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பழனிக்குமார், பிரபு, அந்தோணிராஜ் என்ற கண்ணன், நாகராஜன், அருணாதேவி, தூத்துக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, தொகுதி சமூகவலைதள ஓருங்கிணைப்பாளர் பாலமுருகன், தொகுதி மகளிர் ஓருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, சட்டமன்ற தொகுதி ஒன்றிய பகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் மத்தியில் பேசியதாவது :-
தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுவிற்கு எதிராக செயல்பட்டு தவறான பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எதிர்கட்சிகளுக்கும் எதிரிகட்சிகளுக்கும் தக்கபதிலடியை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் காரணம் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான முகநூல், வாட்ஸ்சப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் இயக்கத்தை பற்றி தேவையில்லாத பதிவுகளை தவறாக யார் பதிவு செய்தாலும் அதற்கு நமது அணி உடனடியாக பதில் அளிக்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கொண்டார்.
மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், இராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், செந்தில்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், பகுதி பொருளாளர் உலகநாதன், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, மற்றும் கருணா, பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக