வியாழன், 27 ஜூலை, 2023

அமைச்சர் கீதாஜீவன் வேண்டுதல்... தூத்துக்குடி பனிமய மாதா வின் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்

 thoothukudi leaks 27-7-2023

 news by 

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி பனிமய மாதா அன்னையில் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் வேண்டினார் பின்பு அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்.

இதுபற்றிய செய்தியாவது :-

       தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி 10ம் திருநாள் அன்று தங்கத்தேர் பவணி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வருகை தரவுள்ளனர்.

    இதனையடுத்து அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் வகையில் பல்வேறு வகையான பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பேசுகையில் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அன்னையை தரிசிக்க எல்லா தரப்பினரும் தனது குடும்பத்தினருடன் வந்து செல்லும் ஒரு நிகழ்வானது எல்லோருக்கும் ஓரு வகையில் மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்து வருகிறது. 


ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நாம் ஒன்றும் குறைந்து போவதில்லை அதன் மூலம் ஒரு சாதனையாளராகதான் இருப்போம். 



இங்கு எல்லா வகையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு எல்லோரும் பனிமயமாதா அன்னையின் அருளாசியோடு நலமுடன் வாழ வேண்டும் 


தொழில் நல்ல முறையில் லாபகரமாக அமைய வேண்டும். உங்களுக்கு வேறு ஏதுவும் தேவை என்றால் அதை என்னிடம் சொல்லுங்கள். 


இந்த பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி நமது பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ஏற்பாட்டில் அடுத்த மாதம் 3,4,5 ஆகிய தினங்களில் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்று பேசினார்.

     விழாவில் மாதா கோவில் பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, துணை மேயர் ஜெனிட்டா, பாதர் ஆரோக்கியசாமி, மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவாணி மார்ஷல், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் டென்சிங், நிர்வாகிகள் ஹெர்மன் ஹில்ட், ஹாட்லி, நிர்மலா, அருள்தாஸ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக