சனி, 3 ஏப்ரல், 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபர்கள் தங்குவதற்கு தடை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவிப்பு!!! நாளை (ஏப்ரல் 4 தேதி) மாலை 7 மணிக்கு பிறகு திரையரங்குகள், உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் வாட்ஸ் - அப் மூலமாக பிரச்சாரம் செய்ய கூடாது. என எச்சரிக்கை!!! .

 தூத்துக்குடி லீக்ஸ்:03.04.2021


தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 7 மணியளவில் முடிவடைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபர்கள் தங்குவதற்கு தடை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவிப்பு.

 


தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 06.04.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை (04.04.2021) மாலை 7 மணியுடன்  தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான காலம் முடிவடைகிறது.  


அதன் பிறகு  வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்கள் உட்பட யாரும் நாளை (மே 4 தேதி) மாலை 7 மணிக்கு பிறகு திரையரங்குகள், உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்வது உட்பட எவ்வித தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது .


மேலும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தக்கூடாது எனவும், அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபர்கள் யாரும் தேவையில்லாமல் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்கக்கூடாது எனவும், வாக்காளர்களுக்கு யாரும் பணமோ, பரிசுப்பொருளோ எதுவும் கொடுக்கக்கூடாது.


வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் யாரும் தற்காலிக பூத்கள் அமைப்பதோ, கூட்டம் கூடுவதோ, ஓட்டு கேட்பதோ, போன்ற எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும், அதே போன்று வாக்காளர்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அரசியல் கட்சியினரோ, வேட்பாளர்களோ வாகனங்களில் ஏற்றிச்செல்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், இது தவிர 2000க்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் வாக்குப்பதிவின் போது முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 


இதுவரை விருப்பம் தெரிவிக்காத முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் நாளை (04.04.2021) காலை 09.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக மைதானத்தில் நேரடியாக ஆஜராகலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக