பூத் ஏஜென்ட் எனும் வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் என்ன...?
1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் வாக்களிக்கும் மெஷினில் வாக்குகள் எதும் இல்லை என உறுதிபடுத்த வேண்டும்.
2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.
3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.
5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
6. வாக்கு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும்.
அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை :-
1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்க்கு இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் அமைக்கலாம். அல்லது இரண்டு பேர் கூட போதும்.
2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.
பூத் ஏஜெண்டை அமர்த்தும் முறை :-
1. வேட்பாளர் அல்லது வேட்பாளாரல் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட் மட்டுமே பூத் ஏஜென்டை நியமிக்க முடியும்.
2. விண்ணப்ப படிவம் எண் 10 - நியமண கடிதம் நிரப்பப்பட்டு, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட கடிதம்.
3. வேட்பாளர்/ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.
4. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும் போது, பூத் ஏஜெண்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகாரிக்கப் படுவார்.
5. போஸ்டல் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.
பூத் ஏஜென்ட் தகுதிகள் :-
1. எழுத படிக்க தெரியவேண்டும்.
2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.
3. அந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.
4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக் கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறைதண்டனை. அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
5. தேர்தல் மற்றும் வாக்கு இயந்திரங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம்.
பூத் ஏஜென்ட் செல்லும் நேரம் :-
1. தேர்தல் நாளன்று, தேர்தல் ஆரம்பி்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கே இருக்க வேண்டும்.
2. விண்ணப்பம் எண் 10, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட நியமன கடிதம் கொண்டு செல்ல வேண்டும்.
3. அதை அந்த பூத் அதிகாரியிடம் கொடுத்து பூத் ஏஜென்டாக பதிவு செய்து கொண்டு, நியமண அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
4. அரசு அதிகாரிகள் கேட்டால் அதை காண்பிக்க வேண்டும். தவறினால் வெளியேற்றப்படுவார்கள்.
5. மாற்று ஏஜென்டும் காலையிலேயே சென்று நியமண அட்டை பெற வேண்டும். பிறகு அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். மாற்றும் போது மட்டும் உள்ளே வரவேண்டும்.
6. உள்ளே உட்காருபவர்கள் தான் முக்கிய ஏஜென்ட். மற்றவர்கள் மாற்று தான்.
7. கைபேசி கொண்டு போக கூடாது
8. புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.
பூத் ஏஜென்ட் வாக்குபதிவு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டியவை :-
1. எந்த பூத்தில் அமர்கிறோரோ, அந்த பூத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் புத்தகம். அதை நாம் முன்பே தயாராக வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே கொடுக்க மாட்டார்கள்.
2. பேனா, பெண்சில், ஏ4 வெள்ளை காகிதம், இயந்திரத்தை சீல் வைக்க சீல் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
3. வாக்குபதிவு மாலையில் முடியும் வரை எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
வாக்குபதிவு அறைக்குள் செய்யவேண்டியவை* :-
1. எந்த நாற்காலியில் அல்லது இடத்தில் அமர்கிறாரோ கடைசி வரை அங்கேயே தான் அமர வேண்டும்.
2. வாக்களிப்பவர் சரியானவர் தானா என்பதை கண்காணிக்க வேண்டும்.
3. எத்தனை வாக்குகள் பதிவாகிறது என்பதை நோட் செய்ய வேண்டும்.
4. உங்கள் கணக்கு, தேர்தல் அதிகாரி கணக்கு, இயந்திர கணக்கு ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.
5. வாக்கு சீல் வைத்து கையெழுத்து வாங்கியவுடன், சரியாக வாகணத்தில் ஏற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவைகள் தான் பூத் ஏஜென்டுகான பணிகள்
விழிப்போடு இருந்து, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...
இத்தேர்தல் நேர் மையாக நல்ல முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக