2021 ஏப்ரல் 6-ல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்திமுக 174 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது.
கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் சில உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. அதனையும் சேர்த்தால் மொத்தம் 187 இடங்களில் உதயசூரியம் சின்னம் போட்டியிடுகின்றது.
திமுக - 174
காங்கிரஸ் - 25
சி.பி.எம் - 6
சிபிஐ - 6
விசிக - 6
மதிமுக - 6
ஐ.யூ.எம்.எல் - 3
கொ.ம.தே.க - 3
மமக - 2
த.வா.க - 1
ஆ.த.பேரவை - 1
ம.வி.க - 1
தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எப்படியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கிலே திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அதிக எண்ணிக்கையில் போட்டியிட திட்டம் வகுத்துள்ளது.
அதிமுகவும் இதே பாணியில்தான் அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக