தூத்துக்குடி அக் 25
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் கிழக்கு பகுதி செயலாளரும் , முன்னாள் துணை மேயருமான பி. சேவியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றினர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் பேசியதாவது
தமிழகத்தில் மீனவ மக்களுக்கு அதிக நலத்திட்டங்களை செய்த அரசு அதிமுக தான்
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவத்தை திசை திருப்பி மீனவ மக்களுக்கும் அதிமுகவுக்குமான உறவில் பிளவை ஏற்படுத்தியது
அதிமுக என்றென்றும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரே இயக்கம்
நூறு நாட்கள் திட்டம் குளோஸ்!!!
ஊரகப் பகுதிகளை மாநகராட்சி உடன் இணைப்பதால் அந்தப் பகுதியில் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
1000 ரூபாய் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றும் ஒரே அரசு ஸ்டாலின் அரசு, மகளிர்க்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயும் மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை அதனை சட்டமன்றத்தில் பேசி தமிழக மக்களுக்கு பெற்று கொடுத்தது எடப்பாடியார் தான் எனவே வரும்
2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.
ஸ்டெர்லைட் மூடியது எடப்பாடி யார் தான் !!!
அடுத்து
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசியதாவது:-
இன்று பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடியார் மிகவும் தெளிவாக உள்ளார்,
மீனவ மக்களுக்கு மீனவர்கள் நண்பனாக இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனையில் அந்த ஆலையை மூடி அந்த ஆலை இன்று வரை செயல்படாமல் இருப்பது எடப்பாடியாரால் தான்.
இன்றைக்கு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது தான் அதை செய்தது திமுகவும் ,காங்கிரஸ் தான் அதனால் நான் இன்று வரை இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர் அதனை எதிர்த்து புரட்சித்தலைவி அம்மா நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.
இப்படி மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பது அதிமுக ஆட்சிதான் எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி யார் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.
வரவேற்புரை
கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெ.ஜெ. தனராஜ் வரவேற்புரையாற்றினார்.
முன்னிலை!!!
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஜோஸ்வா அன்பு பாலன் , மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் வசந்த், வட்டச் செயலாளர்கள் சுயம்பு, சங்கர், சந்திரசேகர், கென்னடி, அண்டோ, இந்திரா, பகுதி கழகப் பொருளாளர் மதன் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜேடியம்மாள், வட்ட அவைத் தலைவர் அமல்ராஜ், பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாம்ராஜ், பகுதி மகளிர் அணி செயலாளர் ஷாலினி ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்க்கவுன்சில் உறுப்பினருமான பிரபு , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெய் கணேஷ், நட்டார் முத்து, முருகன், வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பகச் செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, முனியசாமி,சரவணப் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்
கே.டி சி ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் கவுன்சிலர்கள் மெஜூலா, சாந்தி, தமிழரசி, ராதா ஆனந்த், ஞான புஷ்பம், சாந்தி, ஸ்மைலா, அன்ன பாக்கியம், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறைபொருளாளர் பரிபூரண ராஜா, துணைத் தலைவர் முள்ளக்காடு ஸ்ரீராம், சாகுல் ஹமீது, மீனவரணி வினோத், துறைமுகம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்குமார், தருவைகுளம் ராஜா, மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சொக்கலிங்கம்
தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட அண்ணா தொழில் சங்க துணை செயலாளர் ரயில்வே மாரியப்பன் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் நாகூர் பிச்சை வட்டக் கழக செயலாளர் கொம்பையா வட்ட நிர்வாகிகள் முத்துவீரன் லட்சுமணன் சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்ட நிறைவில்... தூத்துக்குடி முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கிளாமன்ஸ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக