திங்கள், 14 அக்டோபர், 2024

ஓன்னேகால் கோடிக்கு புத்தகங்கள் விற்பனை தூத்துக்குடி கலெக்டருக்கு புகழாரம் சூட்டிய கனிமொழி எம்பி

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃-14-10-2024  photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடியில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகக் திருவிழா கண்காட்சியில்  ஓன்னேகால் கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.



 புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா  நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த கனிமொழி எம்பி தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் பாராட்டி புகழாரம் சூட்டினார்.

இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடியில் சங்கபேரி வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு தான் காரணம் என கனிமொழி கருணாநிதி எம்.பி பேசினார்.

கலெக்டர் வரார் ...?

மனம் திறந்த பாராட்டு!!!

கனிமொழி எம்.பி பேசியதாவது :-


இந்த புத்தகக் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், நமது மாவட்டத்திற்குப் புதிதாக ஒரு மாவட்ட கலெக்டர் வருகிறார் என்று தெரிவித்தார்கள்.



புகழாரம்!!!!

 அந்த மாவட்ட கலெக்டர் இளம்பகவத் என்று சொன்ன பொழுது இனிமேல் புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.


 தமிழ்நாட்டில் இந்த அளவிற்குப் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடியவர். தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியை இவ்வளவு சிறப்பாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து கலந்து கொள்ளக்கூடிய வகையில் நடைபெறக் காரணமானவர்.


    இப்படிப்பட்ட ஒரு சிறப்பான புத்தகத் திருவிழா, 


நெய்தல் கலை விழா, உணவுத் திருவிழா என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகக் கொண்டு வந்து வெற்றியோடு நடத்த வேண்டும் என்றால், அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றினால் தான் அது சாத்தியமாகும். இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா். 


உணவுத் திருவிழா

     தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி முயற்சியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் - கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா - உணவுத் திருவிழா ஹோட்டல் எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் அக்டோபர் 11ம் தேதி துவங்கியது. 

சால்வை அணிவிப்பு!!

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024 நிறைவு நாளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு, விழா சிறப்பாக நடக்க உழைத்த அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்டோரைச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார்.

வெற்றி பெற்றவருக்கு ஒரு லட்சம் முதல் பரிசு கனிமொழி எம்பி !!!

    புகைப்பட கண்காட்சியில், 1,500 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம் வெற்றி பெற்ற ரூபன்ராஜ், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வெற்றி பெற்ற சரவணகுமார் (அ) ஜியோ ஷரவண், 8 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரத்தைக் கனிமொழி எம்.பி வழங்கினார்.


 மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 8 நபர்களுக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.


 நெய்தல் கலை திருவிழாவின் கடைசி நாளில் தூத்துக்குடி இசைப் பள்ளி கலை நிகழ்ச்சி, சஹா கலைக்குழு, உவரி களியல் குழு, ஜெட் கிங் களரி குழு, ஜிக்காட்டம் கலைக்குழு, பாப்பம்பட்டி பெரிய மேளம், கார்த்திக் தேவராஜ் ஆர்கெஸ்டிரா ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


 பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பங்களுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

300 நாட்டுப்புற கலைஞர்கள்!!!

        நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை திறமைகளை வெளிப்படுத்தினர்

 

பொதுமக்கள் மகிழ்ச்சி!!!

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளின் தனித்துவமான உணவுகள் எனப் பலவகையான உணவுகளை மக்கள் உண்டு மகிழும் வகையில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 


பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

    மேலும், நபார்டு சார்பாக 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 


கைவினை பொருட்கள் விற்பனை!!!

அதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள் போன்ற தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கு அமைக்கப்பட்டிருந்தன.


 இவைகளை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கலைஞர் வேடமணிந்து வந்த சிறுவன்!!!


 புத்தக திருவிழா நெய்தல் விழாவில் சிறுவன் ஓருவன் தினசாி தேசிய தலைவர்கள் வேடமணிந்து வந்தான் 


அவன் நிறைவு நாளன்று கருப்பு சிவப்பு வேட்டியுடன் கலைஞர் வேடத்துடன் வந்து அசத்தினான்


 அந்த சிறுவனுக்கு கனிமொழி எம்.பி நினைவு பாிசு வழங்கினார் .

செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!!!

  கண்காட்சியில் அாிய வகை புகைப்படங்கள் வைத்திருந்த பகுதியில் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். 

ஒன்றே கால் கோடி!!!

10 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ஓன்னேகால் கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.  

     நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் 

விழாவில்  தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்கண்டேயன், ராஜா, தமிழரசி, மேயர் ஜெகன் பெரியசாமி,  ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநர் ஐஸ்வா்யா, நபார்டு வங்கி மண்டல மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், கிரீன் ஸ்டார் நிறுவன இயக்குநர் செந்தில் நாயகம், இஎப்ஐ அருண் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், முன்னாள் எம்.பிக்கள் ஹெலன் டேவிட்சன், விஜிலா சத்யானந்த், மாநில மகளிர் ஆணைய தலைவி குமாி விஜயகுமாரி, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் நாமக்கல் ராணி, ஓன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், மூம்மூர்த்தி, செல்வராஜ், சுப்பிரமணியன், துணைச்செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ேகாட்டுராஜா, கஸ்தூாிதங்கம்,  மாநில பேச்சாளர் சரத்பாலா, மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அணி நிர்வாகிகள் ரவி என்ற பொன்பாண்டி, செல்வக்குமார், வீரபாகு, ராமலட்சுமி, செல்வி, ராமர், கோகுல்நாத், பேச்சிமுத்து, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ஜெயக்கனி, சாகுல்ஹமீது, மகேஸ்வரன்சிங், நாராயணவடிவு, தங்கராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, வைதேகி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, கண்ணன், கனகராஜ், விஜயகுமாா், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், பூங்குமார், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, கருப்பசாமி, மகளிர் அணி சந்தனமாாி, ரேவதி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், லிங்கராஜா, ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலா்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக