"தமிழக அரசின் நாய் வளா்ப்புக் கொள்கை 2024"தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாய்களை வளர்க்கும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இது பற்றிய செய்தியாவது:-
நாய் வளர்க்க லைசன்ஸ் கட்டணம் ரூ.5ஆயிரம், புதுப்பிக்க தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் என்று தமிழக அரசு கட்டணம் விதித்திருப்பது செல்ல பிராணிகளை வளர்ப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் அன்பு பொழியும் நாய் இனத்தை வளர்க்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அநியாய லைசன்ஸ் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும்
தமிழக அரசு அறிவிப்பு!!!
தமிழகத்தில்
நாய் வளா்ப்புக்கென
புதிய கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது
அதில் நாய் வளா்ப்புக்கான உரிமம் பெற வயது, உரிமத்தொகை,
உரிமம் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது.
2024 தமிழக அரசு நாய் வளர்ப்பு கொள்கை!!!
சென்னை உயா்நீதிமன்றத்தில் நாய் கடித்தல் மற்றும் நாய் வளர்ப்பு தொடர்பாக பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தின்
வழிகாட்டுதலின்படி நாய் வளா்ப்புக்கென பிரத்யேகமான கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு
பல்வேறு தரப்பினரிடம் நடந்திய கலந்தாய்வுகளின் அடிப்படையில்
"தமிழக அரசின் நாய் வளா்ப்புக் கொள்கை 2024"
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உரிமம் பெற வேண்டும்!!!
நாய்களை வளா்ப்பதற்கு விரும்புவோா் மற்றும் வளர்ப்பவர்களும் இனி அதற்கென உரிய உரிமத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடமிருந்து விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும்.
இதில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாய் இனங்களை மட்டுமே வளா்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் 5000 கட்டணம் செலுத்த வேண்டும்
முக்கியமாக
நாய் வளர்த்து வருபவர்கள் வளர்க்க விரும்புவர்கள் உரிய விண்ணப்பத்துடன் ரூ.5 ஆயிரம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நாட்டு நாய்களாக இருக்கும் பட்சத்தில் பதிவுக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்
இந்த உரிமத்தின் காலம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இரண்டு ஆண்டுக்கு பின் லைசென்ஸ் புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு அபராதம் 500 ரூபாய்?
அப்படிச் செய்யாவிட்டால், நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் என்ற அடிப்படையில் உரிமம் புதுப்பிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நாய்களை வளர்க்கும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அதிர்ச்சி
அளித்துள்ளது."
தமிழகத்தில் நாய்களை என்ற வளர்க்கும் மக்களில் 80 முதல் 90 சதவீதம் கிராமப்புற,ஏழை,
நடுத்தர மக்கள் மக்கள், விவசாயிகள் உட்பட விளிம்பு நிலை மக்கள் அதிகமானோர் தங்களின் குடும்பத்தில் ஒருவராக அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும்
மனிதர்களைத் தாண்டி உண்மையாக பழகக்கூடிய நாய்களை ரத்தத்தின் ரத்தமாக சீராட்டி, பாராட்டி வளர்த்து வருகின்றனர்.
10 சத விகிதத்திற்கு கீழ்உள்ள பணக்காரர்கள் பாசத்துடனும் வளர்த்தாலும், பெரும்பான்மையாக விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும், தங்களுடைய பாதுகாப்பிற்காகவும் தான் வளர்த்து வருகின்றனர்.
நாய் வளர்ப்பு ஏழைகளுக்கு சலுகை வேண்டும்!
எனவே நாய்கள் வளர்ப்பதற்கான உரிம கட்டணத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு
குறிப்பாக அரசாங்கத்திடம் உதவிகள் பெறும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ரூ.500 பதிவு கட்டணமாகவும் நாட்டு நாய் வளர்ப்பவர்களுக்கு உரிமம் பெற
ரூ.250 மட்டுமே பதிவு கட்டணமாக,
தற்போது அறிவித்துள்ள பதிவு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்
வசதி படைத்தவர்கள்!!!
நாய்களை வளர்க்க விரும்பும்
வருமான வரி கட்டக்கூடிய அனைவருக்கும் தமிழக அரசு தற்போது வகுத்துள்ள கட்டணங்களை
பெறுவதில் தவறு இல்லை.
மேலும்
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உரிமத்தின் காலம் முடிந்த பிறகு ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு ரூ.500 அபராதம்
என்பதை வருமான வரி செலுத்துவோருக்கு 100 ரூபாய் ஆகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு
10 பத்து ரூபாய் ஆகவும், புதுப்பிப்பு கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும்.
நாய் வளர்ப்புக்கு தடையா?
தன்னை வளர்க்கும் மனிதர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும், சகோதரனாகவும் மகனாகவும் மகளாகவும்
நண்பனாகவும்
அன்புடன் பழகும்
நாய்களை காக்கும் விதத்தில், பெற்றவர்களையே அனாதை இல்லத்தில் சேர்த்து விடும் இந்த சமுதாயத்தில், தமிழக அரசு விதித்த அதிகமான லைசன்ஸ் கட்டணம், நாய்களை வளர்ப்பதையே தடை செய்யும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதா? என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மிக பயங்கரமாக நாளொன்று 500 ரூபாய் அபராதம் என்ற படு பயங்கர கட்டணம் நம்மை உயிருக்கு உயிராக நேசிக்கும்
நாய்களையும் தெருவில் விடும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
மனித நேயம்!
எனவே மனித நேயம் தழைக்க, அன்பு பெருக தாய் உள்ளத்தோடு
லைசன்ஸ் கட்டணத்தை குறைக்க
தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.
வேதனை!!!?
"தமிழக அரசு நாய்கள் வளர்ப்பதிலும் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று நினைப்பதும் வேதனை அளிக்கிறது.
மிக முக்கியமாக
தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கையில்
வீட்டில் பாதுகாப்புடன் நாய்கள் வளர்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் நாய்களை வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதத்தில், திட்டங்களை
உருவாக்கி இருக்க வேண்டும்.
மேலும் திருடர்களிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் ரவுடி விரோதிகளிடமிருந்தும் பல நூறு
ஆண்டு காலமாக நம்மை காத்து வளர்த்த நாட்டு நாய் இனங்கள் அழிந்திடா வண்ணம் , சுதந்திரமாக வளர்க்கக்கூடிய சூழ்நிலை கொண்ட தமிழக கிராம பகுதிகளில், அவற்றை வளர்க்கும் கிராமத்தினருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் விதத்தில் ஆக்கப்பூர்வமான கொள்கை முடிவுகளை உருவாக்கி செயல்படுத்தி இருக்க வேண்டும்.
அதே சமயம் நாய்கள் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை 2024 -ல் வழங்கப்பட்டுள்ள
நெறிமுறைகளில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் மக்கள் நேசிப்புடன் நாய்களை வளர்க்கக்கூடிய சூழலை முழுவதுமாக பாதித்துள்ளது .
11 வகை நாய்
இனங்களுக்கு தமிழகத்தில் தடை
தமிழ்நாட்டில் 11 நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய இனங்கள் அழிந்து விடாமல் தடுக்க பதிவு செய்யப்பட வேண்டும் .
இந்திய நாட்டு நாய்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை தாங்க முடியாத வெளிநாட்டின் 11 நாயினங்கள் வளர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாய் வளர்ப்போர் விற்போர் வயது 18 வயதிற்கு மேல் இருத்தல் அவசியம்!!!
மேலும் நாய்களின் வயது குறித்து கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட வேண்டும் தடுப்பூசி போடப்பட வேண்டும்
நாய்களின் பால் காதுகள், நகங்களை வெட்டுதல் கூடாது என்றும் நாயின் உடல் பகுதியை சிதைப்பது செயற்கையான தோற்றத்திற்கு மாற்றம் செய்வதற்கும் தடை,
நாய் வளா்ப்பவா்கள் தனி நபா், ஒரு விற்பனை நிறுவனத்துக்கான உரிமையாளா்,
விற்பனையாளர் என யாராக இருந்தாலும் அவா்களுக்கான வயது 18 ஆக இருக்க வேண்டும்
என்ன பல விதிமுறைகள் நாய் வளர்த்துக் கொள்கையில் இடம் சிறப்பாக பெற்றுள்ளன.
குறிப்பாக இனப்பெருக்கத்தை ஒழுங்குமுறை படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து நாய்கள் மூலமாக நோய்கள் வராமல் தடுப்பது,
வணிக ரீதியாக செயல்படும் நாய் வளர்ப்பு நிறுவனங்களை கண்காணிப்பது மற்றும் நாய்கள் விற்பனை அவற்றின் பாதுகாப்பு உணவு தடுப்பூசி போடுதல் சுகாரம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
உளவியல் பயிற்சி!!!
அதேசமயம் மக்களின் பாதுகாவலனாகவும்
உயிர்கொடுக்கும் தோழனாகவும், எத்தனை நாள் பிரிந்திருந்து சந்தித்தாலும் மனிதனைப் போல் அல்லாது உப்பிட்டவரை மறவாது உள்ளன்போடு
பாசம் பொழிந்து, தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.
நாய் வளர்ப்பு என்பது தனிமையை மறக்கடித்து மனநிம்மதி தரும். பொதுவாகச் செடி வளர்ப்பு, செல்லப் பிராணிகள் வளர்ப்பு போன்றவை சிலருக்குப் பொருளாதார லாபம் ஈட்டுவதாக இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளும் எல்லாருக்கும் மனமகிழ்வைத் தந்திடும் ஒரு நிறைவான பழக்கமும் தனிமையில் இருந்து விடுபடக்கூடிய மனவளத்திற்கான உளவியல் பயிற்சியும் ஆகும்.
தமிழக முதல்வர்!!!
எனவே ...
தமிழக முதல்வர் தலையிட்டு
" தமிழ்நாடு நாய் வளர்ப்புக் கொள்கை 2024-ல் உரிய திருத்தம் செய்து, மனிதர்கள் போற்றும் விலங்கின
தோழனை "நாய் என்ற அளவுகோல் கொள்ளாமல் ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற அளவுகோலோடு
பெருமைப்படுத்தும் வகையில்" நம்மிடையே
பிரிக்க முடியாத உறவாக வாழும்
நாய் இனத்தை பேணிக் காக்கும் வகையில்,
மிக அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வளர்ப்பதற்கான விண்ணப்பத்தின் பதிவு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏ.என்.எஸ் பிரசாத்
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக