செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை என கூறி தமிழகம் முழுவதும் 36 கோடி மோசடி செய்த பலே ஆசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் :16.04.2024


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- (36 கோடியே 13 லட்சம்) மோசடி 

இந்த வழக்கில்  சம்மந்தப்பட்ட பாலகுமரேசன்  இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- (36 கோடியே 13 லட்சம்) மோசடி செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன்(46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 


 பாலகுமாரேசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.


மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன்  என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 


இன்று 16-4-2024 அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்  ஆய்வாளர்  அந்தோணியம்மாள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக