▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂12-3-2024
news by
Shanmuga Sundaram
நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன். என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை படி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 1, 2, 3, 15, 16, 17, 18, 51 முதல் 60 ஆகிய பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் வட்டச்செயலாளர்கள் வட்டப்பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் 4ம் கட்ட ஆலோசனை கூட்டம் போல்பேட்டை கீதாஹோட்டல் மைதானத்தில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பலருக்கு சென்றடையாத மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அப்போது பேசிய கவுன்சிலர் உள்பட திமுகவினர் தங்களது பகுதிகளில் சாலை மின்விளக்கு அங்கன்வாடி இரவு நேர காவல்துறை ரோந்து பூங்கா சீரமைத்தல் கழிவுநீர் கால்வாய், உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
செய்தபணிகளுக்கும், நன்றி தொிவித்து, பொன்னாடை போற்றி வாழ்த்து தொிவித்தனர்.
அனைத்தையும் குறிப்பாக எடுத்துக்கொண்டு பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி பேசியதாவது:-
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் பதவியேற்ற காலத்தில் என்ன நிலையில் தமிழகம் இருந்தது.
பொருளாதாரமும் பின் தங்கிய நிலையில் இருந்தது. கொரானா என்ற கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாத்து அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி நான்காயிரம் வீதம் வழங்கியது மட்டுமின்றி தொழில்கள் முடங்கியிருந்த நேரத்தில் பல்வேறு உதவிகளைதிமுக அரசு செய்தது.
அதன் பின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு எல்ேலாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உாிமைத்தொகை இலவச பேருந்து புதுமைப்பெண் திட்டம், இல்லம் தோறும் கல்வி, மருத்துவம், நான்முதல்வன், திறன் மேம்பாட்டு பயிற்சி, என பல புதிய திட்டங்களை செய்து சாதனைகள் செய்துள்ளார்.
முதலமைச்சர் மாநகராட்சி பகுதி வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஓதுக்கீடு செய்து பல்வேறு கட்டமைப்பு பணிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டத்தின் ேபாில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் இருந்து வந்தது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்ததால் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து திமுக ஆட்சி அமைந்தபின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று பதவியேற்ற பின் முறையாக பாராபட்சமின்றி அனைத்து வார்டு பகுதிகளுக்கும் அடிப்படை தேவையான கால்வாய், சாலை, மின்விளக்கு, மாசு இல்லாத, மாநகரை உருவாக்கும் வகையில் மரக்கன்று நடுதல் நெகிழிகளை தவிர்த்து மஞ்சள் பை உபயோகித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புறநகர் பகுதிகளிலும், கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி விரைவு படுத்தியுள்ளோம்.
அதிலும் குறிப்பாக புதிதாக தனசேகரன்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய பூங்காக்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள 155 பூங்காக்கள் முறையாக பராமாிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் நடைபயிற்சியும் பல விளையாட்டுகள் மூலம் பயனடையும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த பூங்காக்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் மற்றும் இறகு பந்து விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல நவீன காலத்திற்கு ஏற்ப உருவாக்கி கொடுத்துள்ளோம்.
இங்கே பல பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்னும் கூடுதலான வசதிகள் வருங்காலங்களில் செய்து கொடுக்கப்படும்.
உங்களை நம்பிதான் நாங்கள் எங்களை நம்பிதான் நீங்கள் ஓவ்வொரு பகுதிகளிலும் இருக்கின்றவர்கள் குடும்பத்தில் முதலமைச்சாின் திட்டங்களில் ஏதாவது ஓன்றின் மூலம் எல்லோரும் பயனடைந்து இருப்பீர்கள் அதை இல்லை என்று யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
திமுக ஆட்சியின் சாதனைகளையும் இரண்டு ஆண்டுகாலமாக மாநகராட்சி பகுதியில் செய்துள்ள பணிகளையும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் வீடுதோறும் தின்னை பிரச்சாரம் மூலம் கொண்டு சேர்த்திட வேண்டும் கடந்த 2019 தேர்தலின் போது கனிமொழி எம்.பி, பெற்ற வாக்குகளை விட இந்த முறை மாநகராட்சி பகுதியில் அதிகமான வாக்குகளை பெற்றுகொடுக்கும் அந்த வார்டு நிர்வாகிகளுக்கு பாிசுகள் வழங்கப்படும்.
தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சி இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் நீங்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த தொகுதியில் தமிழகம் முதலமைச்சாின் தங்கை கனிமொழி எம்.பி போட்டியிட உள்ளார்கள்.
அவருக்கு அனைவரும் முழு மனதுடன் ஓற்றுமையாக பணி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் கனிமொழி என்பதை நாம் நிருபிக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் நடைபெறுகின்ற எல்லா பணிகளிலும் அவர்களுடைய பங்கு இருக்கும் புதிதாக 500 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூாி மருத்துவமனை கோவில் தேவாலயம் மசூதி இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கால்வாய்களும் அமைக்கப்பட இருக்கின்றன. கடந்த வருடம் பெய்த எதிர்பாராத கனமழையால் கயத்தாறு கடம்பூர் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வௌ்ளமும் நம்முடைய 1 2 3 வார்டு பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இனி வரும் காலங்களில் அப்படி ஓரு நிலை வராது என்பதை நான் உத்தரவாதத்தோடு கூறுகிறேன்.
நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன்.
என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம். உங்களுக்கு நம்பிக்கை உள்ளவனாக இருந்து பணியாற்றுவேன் வரும் தேர்தலில் கனிமொழிக்கு அனைவரும் ஆதரவாக இருந்து செயல்பட்டு எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழப்பதற்கு இன்றிலிருந்து சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் காந்திமணி, சுப்புலட்சுமி, முத்துவேல், பட்சிராஜ், சுயம்பு, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, வசந்தி பால்பாண்டியன், கருப்பசாமி, மைக்கேல்ராஜ், சுப்பிரமணியன், ராஜன், தெய்வேந்திரன், மகேஷ்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், பூபேஷ், செல்வக்குமார், வட்டப்பிரதிநிகள் மதியழகன், பிரபாகர், அருணகிாி, முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, பகுதி மாணவரணி அமைப்பாளர் ஆனந்த், அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், மற்றும் ஜோஸ்பர், தர்மராஜ், ஆறுமுகபாண்டியன், கல்பணா, ரகு, ராஜசேகர், பகுதி மகளிர் அணி மாலாசின்ஜா, குமாஸ்தா பாலசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் இசக்கி முத்து, மகளிர் தொண்டரணி சித்திரைபுஷ்பம், முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக