வியாழன், 2 நவம்பர், 2023

கற்களால் தாக்கி செல்போன் பறிக்கும் கும்பல் தூத்துக்குடி யில் நால்வர் கைது காவல்துறை அதிரடி

தூத்துக்குடி லீக்ஸ்  02.11.2023

 தூத்துக்குடியில் கற்களால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கும் கும்பல் நான்கு பேர் கைது - ரூபாய் 15,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 500- பறிமுதல்.தூத்துக்குடி காவல்துறை அதிரடி நடவடிக்கை




இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடி சாயர்புரம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபாலகிருஷ்ணன் மகன் செல்வகுமார் (32) என்பவர் கடந்த 31.10.2023 அன்று தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.


இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

அதில், தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (26), தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20), தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர்களான மாரிச்செல்வம்  மகன் முனீஸ்குமார் (21) மற்றும் மாடசாமி மகன் சுப்புராஜ் (20) ஆகியோர் சமபவதன்று செல்வக்குமாரை கல்லால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான இசக்கி செல்வம், சூரியபிரகாஷ், முனீஸ்குமார் மற்றும் சுப்புராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 15,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 500/-யும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட  இசக்கி செல்வம் மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகள் என 8 வழக்குகளும்,  சூரிய பிரகாஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 4 வழக்குகளும்,  முனீஸ்குமார் மீது ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக