செவ்வாய், 14 நவம்பர், 2023

ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து 154வது பிறந்தநாள் அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

 thoothukudileaks 15-11-2023

தூத்துக்குடி நகர தந்தை

 ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து 154வது பிறந்தநாள் அரசு விழா.

தூத்துக்குடியில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.



தூத்துக்குடியின் நகர தந்தை என அழைக்கப்படும்  ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து  பிறந்தநாள் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முந்தைய அதிமுக அரசு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அதன் அடிப்படையில் இன்றைய தினம் குருஸ் பர்னாந்து அவர்களின் 154வது பிறந்தநாள் அரசு விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. 


அதனை முன்னிட்டு தூத்துக்குடி பிரதான சிக்னல் அருகே உள்ள குருஸ் பர்னாந்து திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 



அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு லட்டு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்நிகழ்வின் போது கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில மீனவரணி துனைத் தலைவர் எரோமிஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், ஜெ.ஜெ. தனராஜ், அருண்ஜெபக்குமார்,  மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், மேற்கு பகுதி முருகன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரு மணி, சுகந்தன் ஆதித்தன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலட்சுமணன், எம்.பெருமாள், மனோஷ்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, சந்தனபட்டு,  வழக்கறிஞர்கள் முனியசாமி,  சரவண பெருமாள், ராஜ்குமார், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், வலசை வெயிலுமுத்து, தலைமைக் கழகப் பேச்சாளர் முருகானந்தம்,  கே.டி.சி. ஆறுமுகம்,  எ.கே.மைதீன், மீனவர் சொசைடி கிளமன்ஸ், வட்டக் கழக செயலாளர்கள்  ராமசந்ததிரன், சொக்கலிங்கம், கொம்பையா, மணிவன்னன், அன்டோ, நிக்கோலஸ், உதயசூரியன், மணிகண்டன், நவ்சாத், கே.கே.பி. விஜயன், மற்றும் சாம்ராஜ், குரூஸ்புரம் அண்டோ, நிலா சந்திரன், சுந்தரேஸ்வரன், உதயகுமார், பிரேம், பரிபூரணராஜா, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, தீனா வசந்த், வினோத், தெர்மல் ஜவகர்,  மகளிர்கள் ராஜேஸ்வரி, பானுமதி, தமிழரசி உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர். 


இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் துணை மேயரும் மாநகர கிழக்கு பகுதி அதிமுக செயலாளருமான சேவியர் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக