வெள்ளி, 20 அக்டோபர், 2023

தூத்துக்குடியில் விழிபிதுங்கும் வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் அட்ரா சிட்டி கள்!!! திமுகவுக்கு எதிராக தூத்துக்குடி வியாபாரிகள் திசை திருப்ப படுகிறார்களா!!!

 thoothukudileaks 20-10-2023 

Photo news by sunmugasunthram & arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் அட்ரா சிட்டி களால் தூத்துக்குடியில் விழிபிதுங்கும் வரும் வியாபாரிகள் புலம்பல் திமுகவுக்கு எதிராக 


தூத்துக்குடி வியாபாரிகள்

திசை திருப்ப படுகிறார்களா பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை களால் தூத்துக்குடி வியாபாரி மணைவி அதிர்ச்சி உயிரிழப்பு சோகத்தில் உள்ளார்கள்.


சீல் வைக்கப்பட்ட வியாபார கடைகள் 


இது பற்றிய செய்தியாவது:-

சீர்மிகு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 52 வார்டுகளும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 8 வார்டுகளும் உள்ளடக்கி 60 வார்டுகள் கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. 

இதில் பெண் கவுன்சிலர்கள் 32 பேர்களும், ஆண் கவுன்சிலாகள் 28 இதில் மேயர், துணை மேயர் உள்ளடக்கம். மேயராக ஜெகன் பெரியசாமியும் துணை மேயராக ஜெனிட்டா செல்வராஜும் பணியாற்றி வருகின்றனர். 

அரசு துறை அதிகாரியாக ஆணையர், துணை ஆணையர், செயற்பொறியாளர், பொறியாளர், உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் என பல்வேறு பணிகள் சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் தூத்துக்குடி மாநகராட்சி பணியாற்றி வருகின்றனர். 

தூத்துக்குடி மாநகர மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பது, முறையாக மாநகராட்சி  பல்வேறு வரிகள் வசூல் செய்வது போன்ற பணிகள் செய்து வருகிறது



. இதனை கடந்து அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் விற்பனை செய்தால், மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை உரிய எடுப்பது வழக்கமான பணிகளாக இருந்து வருகிறது. 


இதில் சில அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் விதிமுறைகளை மீறி பல இடங்களில் இடையூறுகள் செய்து அரசுக்கும், திமுக கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாநகராட்சி மேயர், துணை மேயர் மக்களோடு மக்களாக பழகி, குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகின்றனர். 

இதற்கு நேர்மாறாக அதிகாரிகள் சிலர் செயல்படுவதால், பல்வேறு வகையில் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். சோதனை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களால் வியாபாரிகளுக்கு வேதனை தான் மிஞ்சுகிறதாம். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் இயங்கும் பிரபல மளிகை கடைக்கு பல்வேறு இடையூறுகள் கொடுத்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். எல்லா விசயத்திலும் அரசு அலுவலர்கள் இதே போல் நேர்மையாக செயல்படுகிறார்களா? என்று வியாபாரிகள் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவுக்கு எதிராக 

தூத்துக்குடி வியாபாரிகள்

திசை திருப்ப படுகிறார்களா!!!

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த வியாபாரிகளும் தங்களது முடிவை கூட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டு தாங்கள் வாக்களிக்க இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஸ்மார்ட் சிட்டி anna busstand பேருந்து நிலையம் கடைகள் முன்பு ஏற்கனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் முன்னுரிமை என்றிருந்தார்கள் இப்போது அவர்களும் கவலையில் கன்னத்தில் கைவைத்தபடி உள்ளார்கள் .

மேயர் பொறுப்பேற்ற சில மாதங்களில் 152 பூங்கா இருக்க வேண்டிய மாநகராட்சி பகுதியில் வெறும் 111 பூங்கா எங்கு இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பி பல்வேறு தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை பல மீட்டுள்ளார். 

இன்னும் மீட்கப்படாமல் பல இடங்கள் இருந்து வருகின்றன. இதுபோன்ற இடங்களை தாரை வார்த்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றன.

மாநகராட்சி பகுதியில் இயங்கும் ஒருசில கடைகளை மட்டும் களஆய்வு செய்து தங்கள் கடமை நிறைவேற்றியதாக கூறும் அதிகாரிகள், பாரபட்சமின்றி அனைத்து பணிகளிலும், குறிப்பாக சுத்தமான குடிநீர், மழைநீர் வடிகால், கழிவுநீர், தெரு விளக்கு, தரமான சாலைகள் போன்ற விசயங்களில் 100 சதவீதம் நிறைவேற்றி விட்டார்களா என்று தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


அட்ரா சிட்டி அதிகாரிகள்!!! 

வியாபாரி களை மாநகராட்சி அதிகாரிகள் என்ன பாடாய் படுத்துகிறார்கள் உதாரணமாக முன்பு நடந்த ஒரு சம்பவம்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் சென்றுள்ளார்கள்

கடையில் முகப்பு பாட்டல் மேலே ஒரேயொரு தீப்பெட்டி இருந்துள்ளது 

உடனே ஆயிரம் ரூபாய் அபராதம் போடுங்கள் என சொல்ல கடைக்காரர் ஜயா சிகரெட் வாங்கினா பற்ற வைக்க கேட்ப்பார்கள் அதான் ?

இனி தீ ப்பட்டி வைக்க மாட்டேன் அதில் லாபம் எதுவும் கிடையாது என கெஞ்சிட அஃது சரி என விடாப்பிடியாக நூறு ரூபாய் அபராதம் வசூலித்து விட்டு சென்றார்கள் 

வெறும் ஒரு ரூபாய் தீப்பெட்டி கடை முன் இருந்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் குறைக்கப்பட்டு நூறு ருபாய் அபராதம் கட்டிய வியாபாரி !!!

இதுபோல கெடுபிடிகள் பிளாஸ்டிக் கப் மற்றும் பை இருக்கிறதா கடைகளில் புகுந்து உள்ளே பொருட்களை கொட்டி கலைத்து விட்டு சென்றால் தான் திருப்தி அடையும் ஆபிஷர் கள் 

யாரிடம் என்னத்த சொல்ல தெரியல வியாபாரிகள் புலம்புகிறார்கள் .

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை களால் தூத்துக்குடி வியாபாரி மணைவி அதிர்ச்சி உயிரிழப்பு!!!

தூத்துக்குடியில் கடைக்கு சீல் வைத்ததால் அதிர்ச்சியில் வியாபாரியின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில் செல்லப்பாண்டியன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

 இன்று காலை அவரது கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் இன்று கடைக்கு சீல் வைத்துள்ளனர். கூட்டத்தை கூட்டி பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவித்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். 


இதனால் வேதனையடைந்த வியாபாரி செல்லப்பாண்டியன் தனது மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது மனைவி சசிகலா (40) என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து அப்பகுதி வியபாரிகள் கூறுகையில், ஆட்சிக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அலுவலர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர் என்கிறார்கள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக