செவ்வாய், 31 அக்டோபர், 2023

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு தூத்துக்குடி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் விழிப்புணர்வு நாடகம் காண்பிக்க பட்டது

 தூத்துக்குடி லீக்ஸ் 1-11-2023

செய்தி புகைப்படங்கள்

ரோஜா அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை பொதுமக்கள் விழிப்புணர்வு இவ்வாரம் முழுவதும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது




அதை முன்னிட்டு நேற்று31-10-2023 ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே காலை 11.30 மணியளவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்



தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் (218டீம்) லஞ்சம் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் வழிகாட்டுதல் படி 

" லஞ்சம் கொடுப்பதும்,

லஞ்சம் வாங்குவதும் குற்றம்" என்பதை வலியுறுத்தி...

நாலைஞ்சு குறு நாடகம் நடித்து காட்டினார்கள் பொதுமக்கள் கை✋ தட்டி வரவேற்றனர்.

பின்னர் அங்கு உள்ள பயணிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சி யில் தூத்துக்குடி மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் மற்றும் மத்திய பாக காவல்துறை யினர் கலந்து கொண்டனர்.

video அவசியம் பாருங்கள் 



ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை 

லஞ்சம் தவிர்!

நெஞ்சம் நிமிர்!!

லஞ்சம் கொடுப்பதும்,

லஞ்சம் வாங்குவதும் குற்றம்

லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது

தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி :

துணை காவல் கண்காணிப்பாளர்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை

2/175, பாளையங்கோட்டை ரோடு, மறவன்மடம், தூத்துக்குடி - 628101.

காவல் துணை கண்காணிப்பாளர்

கைபேசி : 9442364144

காவல் ஆய்வாளர்கள்

கைபேசி: 94981 95826, 82204 99972

காவல் உதவி ஆய்வாளர்

கைபேசி : 94421 91504.

இயக்குநர்,

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை

எண்.293,எம்.கே.என். ரோடு.

ஆலந்தூர், சென்னை - 600016.

தொலைபேசி : 044 - 22321090.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக