தூத்துக்குடி லீக்ஸ் 17-7-2023
செய்தி புகைப்படங்கள்
த.சண்முகசுந்தரம்
(மூத்த பத்திரிகையாளர்)
தூத்துக்குடி திமுக இலக்கிய அணி அமைப்பாளராக ஜீவன்ஜேக்கப் நியமனம் இவர் அமைச்சர் கீதா ஜீவன் அவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து தூத்துக்குடி மாநகர திமுக இலக்கிய அணி நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஜீவன் ஜேக்கப் ( திமுக இலக்கிய அணி அமைப்பாளர்) |
தலைவராக சக்திவேல், துணைத்தலைவராக நலம்ராஜேந்திரன், அமைப்பாளராக ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர்களாக பிக் அப் தனபால், பால்ராஜ், சிந்தனை சுடர் குமரேசன், சகுந்தலா, ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தலைவர் துணைத்தலைவர் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலக்கிய அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் .
சந்திப்பு |
அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கொண்டார். இலக்கிய அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன்ஜேக்கப் அமைச்சர் கீதாஜீவன் கணவர் என்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக