செவ்வாய், 23 மார்ச், 2021

தூத்துக்குடியில் .. பகத்சிங் நினைவுநாள் அனுசரிப்பு!!!

தூத்துக்குடியில் AIYF சார்பில்பகத்சிங் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.




இந்தியாவில் ஆங்கிலேயே அரசு ஆட்சியின் போது தொழில் தகராறு சட்ட வரைவு என்ற ஒன்றை கொண்டு வந்தது.

 இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.



 இதை தொடர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசால் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். 

துாத்துக்குடியில் இன்று AIYF சார்பில் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் AIYF மாவட்ட செயலாளர் சந்தனசேகா் தலைமை தாங்கினார். CPI மாநகர செயலாளர் ஞானசேகர், AIYF மாவட்ட குழு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,பெருமாள்,காளிஸ்வரன்,ராஜா,ஜீவா,பலவேசம் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மற்றும் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு வகுப்புவாத அரசியலையும்,அதற்கு துணை போகும் அடிமை சேவக அரசியலையும் எதிர்ப்போம் மக்கள் ஒற்றுமை மற்றும் ஜனநாயக அமைப்பினை மீட்டு எடுப்போம் என தீர்மானிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக