செவ்வாய், 16 மார்ச், 2021

தேர்தலில் இந்து சமய அறநிலையத்துறையினரை பணி அமர்த்த தடை விதிக்க ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பாக ... இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் கோரிக்கை கடும் எதிர்ப்பு!!!

 தேர்தலில் இந்து சமய அறநிலையத்துறையினரை பணி அமர்த்த தடை விதிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஹிந்து சேனா  தேசிய பேரியக்கம் கோரிக்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.



இந்த தேர்தலில் இந்து சமய அறநிலை துறை சார்ந்த அதிகாரிகளை பயன்படுத்துவதற்காக அவர்களுக்கு ஆலோசனை வகுப்புகள் நடைபெறுவதை  அறிந்தோம்.

இதுவரை நடைபெற்றுள்ள சட்டமன்றம் , பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் இந்து சமய அறநிலைத் துறையினை சார்ந்த அதிகாரிகளுக்கு  இதுவரை தேர்தல் பணி வழங்கியே துஇல்லை.இந்து சமய அறநிலையத்துறை என்பது திருக்கோயில்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை (trust)ஆகும்.

மேலும் தமிழ் மாதங்களான பங்குனி , சித்திரை , வைகாசி ஆகிய மாதங்களில் தான்   இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில்   இந்துக்களின் பாரம்பரிய மற்றும் மிக முக்கிய  திருவிழாக்கள்  மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 


இந்த ஆண்டு இந்து சமய அறநிலைய துறையினரை திடீரென தேர்தல் பணிகளில் பணி அமர்த்துவதற்கு என்ன காரணம் என்று இந்து மக்களிடையே மிகவும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.


இதனை எல்லாம் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்ட மன்ற தேர்தல் , பாராளுமன்ற இடைத் தேர்தல் மற்றும்  இனி வரும் காலங்களிலும் அனைத்து தேர்தல்களிலும்   நிரந்தரமாக இந்து சமய அறநிலையத் துறையினரை தேர்தல் பணிகளில் பணியாற்ற அனுமதி வழங்காமல் தடை விதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பாகவும் மற்றும் ஹிந்து சேனா தேசிய பேரியக்கத்தின் சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக