தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.~ விற்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் புது டெல்லி தலைமையின் ஆலோசனையின் படியும் , மாநில செயற்குழுவில் ஆதரவு நிிிலை எடுக்கப்பட்டது.
தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அவரிடம் ஆதரவு கடிதத்தை ஹிந்து சேனா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினர்.
ஹிந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தமிழக மாநில தலைவர் அருள்வேலன் ஜி பேசிய போது ...
பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் பல்வேறு வகையான சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் மத்திய அரசு தமிழகத்தில் மக்களின் தேவைகள் அறிந்து பல திட்டங்களை செயல்படுத்தி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் உலகத்தையே மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து மிக சிறப்பாக எடுத்து பெரியளவிலான உயிரிழப்பை தடுத்து மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
எனவே தேசிய ஜனநாயக கூட்டணியான பா.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு , அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க.கூட்டணிக்கு எங்கள் ஹிந்து சேனா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு வகையான களப்பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணியினை சார்ந்த அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்
.இந்த நிகழ்வில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் தீனதயாளன் , மாநில செயலாளர்கள் சுனீல் கெட்டா , செல்வகுமார் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜன் , யுகேஷ் , கார்த்தி , பாலாஜி , வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக