ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!!

 மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிவான வணக்கம். சாத்தான்குளம் ஒன்றியம், படுக்கப்பத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், பழைய வளாக பராமரிப்பு பணிக்கு ஒப்பந்தம்  விடப்பட்டிருந்தது. 



இதற்கான தொகை 19.5 லட்சம். மேற்கூரை இடித்து, புதிய தளம் அமைத்தல், புதிய தரைதளம் அமைத்தல், சுற்றுச்சுவர் பழுதுபார்த்தல்,  புதிய கதவு அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில், நடந்துள்ளது. சுற்றுச்சுவர் முழுமையாக பராமரிக்காமல் பழைய டைல்ஸ் கற்களை முழுமையாக மாற்றாமல் ஏனோ தானோ என்று பணிகளை செய்து இருக்கின்றனர், 




தரைத்தளத்தை மாற்றி அமைக்கவே இல்லை. படுக்கப்பத்து வை சுற்றி போக்குவரத்து வசதி கூட இல்லாத பல கிராம மக்கள் இம் மருத்துவ சேவையை நம்பியே வாழ்கின்றனர்.




 அரசு மருத்துவமனை இவ்வளவு மோசமாக பராமரிக்கப்பட்டு உள்ளது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. .  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடி கவனத்தில் எடுத்துக் கொண்டு பணிகளை ஆய்வு செய்ய பணிவுடன் வேண்டு ம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக