thoothukudi leaks
Photo news by
Arunan ( journalist)
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றம் சாதாரண கூட்டம் இன்று (28-10-2024) நடைபெற்றது .
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றம் கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆனையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதி எண் 156(1) கீழ் தூத்துக்குடி மாநகராட்சி
அலுவலகக் கட்டிடத்திலுள்ள மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெறும் சாதாரணக் கூட்டத்தில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டமானது மாநகராட்சிக்கு
சொந்தமான 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பயிலும் 18 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி திட்டத்திற்கான நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவினம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக
செயல்படுத்தப்பட்ட 8 பள்ளிகளுக்கு 05.09.23 முதல் 22.02.2024 வரை மேற்கொள்ளப்பட்ட உணவு
வழங்கிடும் பணியினையும், அரசிடம் இருந்து மேற்படி திட்டத்திற்காக ஓதுக்கீடு செய்து வரப்பெற்ற
நிதியினை கொண்டு மேற்படி காலங்களில் செலவு செய்யப்பட்ட தொகை ரூ. 9,64,485.60/- ஆகும்.
மேற்படி ஒப்பந்ததாரருக்கு முடிவு பெற்ற 8 பள்ளிகளின் ஒப்பந்தத்தை 23.02.2024 வரை
நீட்டிப்பு செய்து வழங்கிடவும்,
1 முதல் 5ம் வகுப்பு பயிலும் 18 பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி No Food Waste
நிறுவனத்தின் 23.02.2024 ல் முடிவு பெறும் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு காலம்(23.02.2025)
வரை நீட்டிப்பு செய்வதற்கும் ஒரு மாணவருக்கு ரூ.12.65/- வீதம் 2597 மாணவர்களுக்கு
ஒராண்டிற்கு பள்ளி செயல்படும் நாட்களுக்கான(210 மட்டும்) உத்தேச செலவினத் தொகை ரூ.
69.00 லட்சத்தினை முதலமைச்சரின் காலை உணவு திட்ட நிதியில் இருந்து செலவினம்
மேற்கொள்ளவும் மாமன்றத்தின் அனுமதி வேண்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
திருட்டு குடிநீர் கனெக் ஷன்
அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இல்லீகல் குடிநீர் பைப் லைன் இருக்கிறது என குற்றச்சாட்டு தெரிவித்தார்
மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகள் அஃது குறித்து பல பகுதிகளில் நடவடிக்கை எடுத்து அதற்குரிய வரி கட்டும் படி செய்து வருகின்றனர் எனறார்.
சாலை வசதி வேண்டும்!!!
அடுத்து திரேஸ்புரம் பெண் கவுன்சிலர் சாலை வசதி கள் தங்கள் பகுதிகளில் முறையாக செய்து தர வேண்டும் என்றார்.
நல்லா இருந்த தூத்துக்குடியை நாசாமாக்கிட்டாங்க??
திமுக கவுன்சிலர் இசக்கிராசா
நல்லா இருந்த தூத்துக்குடியை நாசாமாக்கிட்டாங்க பாதாள சாக்கடை திட்டம் என்ற பேரில் என ஆதங்கமானார்.
மேயர் ஜெகன் பெரியசாமி
அடிச்சி சொல்றேன் நல்லா பாருங்க தூத்துக்குடி யில் முன்பைவிட பல்வேறு திட்டங்களால் நல்ல விதமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இருக்கிறது என்றார்.
கூட்டம் நடைபெறும் முன்னதாக.. ஊழல் ஒழிப்பு தினம் முன்னிட்டு உறுதி மொழி மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் மதுபாலன் முன்னிலையில் கவுன்சிலர் கள் எடுத்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக