வாகன சோதனையில் இருந்து தப்பிக்க கனிமொழி எம்பி பெயரை சொல்லிய
இளைஞர்கள் காவல்துறை இடம் அகப்பட்டார் கள் தாங்கள் அப்படி கூறியதற்கு மன்னிப்பும் கேட்டனர் .
பிடிப்பட்ட இளைஞர்கள் |
இது பற்றிய செய்தியாவது:-
கடந்த செவ்வாய்க்கிழமை (01.10.24) இரவு கோவையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் ..
"நான் கனிமொழி எம்.பி. அவர்களின் உதவியாளரின் தம்பி என்று கூறிய காணொலி வெளியானது".
காவல்துறை விசாரிப்பு!!!
அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக கனிமொழி அவர்களின் உதவியாளர் தம்பி என தவறான தகவலை கூறியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கண்ணியமிக்க தலைவர் பெயரை பொதுவெளியில் தவறாக பயன்படுத்தி காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ!!!
இதுதொடர்பாக காணொலி வெளியிட்டுள்ள அந்த இளைஞர், “பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்று திரும்பியபோது, காவல்துறையினர் சோதனையில் பிடிபட்டபோது போதையில் தவறான வார்த்தைகளை பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
பொது இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பெயரை கூறியது தவறு, அவரின் உதவியாளர் யார் என்றே தெரியாது. பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இருப்பினும்... இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக