▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
14-9-2024 photo news
by Arunan journalist
வீடுகளில் திமுக கொடி? கடும் விரக்தியில் அடிமட்ட திமுக தொண்டன்
"திமுக பவள விழா ஸ்கேன் ரிப்போர்ட் "
இது பற்றிய செய்தியாவது:-
பேரறிஞர் அண்ணா வால் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி பவளவிழா
திமுக வினர் கொண்டாட்டம்
தமிழகத்தில் தேசிய பேரியக்கமான காங்கிரஸ் கோலோச்சி செய்ததை முழு வீச்சில் எதிர்த்து அன்று பேரறிஞர் அண்ணா வால் ஆரம்பிக்கப்பட்டது தான் திமுக .
இன்று 75 வது ஆண்டு பவளவிழா கொண்டாட்டம்
ஒரு கட்சி 75 ஆண்டு கள் கடந்த பின்பும் மக்கள் மத்தியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பிடித்த கட்சி திமுக மட்டுமே என்று பெருமை உரித்தாகிறது
திமுக தோளில் சுமையாய் காங்கிரஸ் !!!
தூக்கி எறியுமா???
ஆனால்? ஆரம்பத்தில் கடைபிடித்த கொள்கைகள் கோட்பாடுகள் அண்ணா மொழியில் சொல்வதென்றால் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு"
காத்து உயர்ந்து நிற்கிறதா ?
அனைவரின் எதிர்ப்பார்ப்பும் இதுவே???
அப்போது...
காங்கிரஸ் கட்சி நோக்கி எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய திமுக.
அதன் வீறு கொண்ட வீரம் சினம் தாக்கு பிடிக்க முடியாமல் அஞ்சியது காங்கிரஸ்.
திமுகவை வளர விடாமல் பழிவாங்க துடித்தது
காங்கிரஸ் கட்சியால் திமுக மிசா சிறை கொடுமைகள் தலைவர்களிருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை சிறை சித்ரவதை அனுபவித்தார்கள்
?
இன்றோ???
சமீபத்தில் கூட ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் ஈவுயிறக்கமின்றி நடந்த கொண்ட ஒட்டு மொத்த தமிழர்கள் வெறுத்து ஒதுக்கி ஒட்டு வங்கி இல்லாத...
பழைய இரும்பாய் துருப்பிடித்து மக்கிய துகள்களான....
அதே காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு தேர்தல்களில் தூக்கி திமுக சுமந்து கொண்டு வருகிறது
மாறியதா கொள்கைகள்!!!
திமுக வில் கொள்கை பிரச்சாரம் பிரபலமான பாடல் இன்றும் பட்டி தொட்டி யில் ஒளிபரப்பும் பாடல் அன்று எழுச்சி இருந்தது?.
"அண்ணா வழியில்..
அயராது உழைப்போம்
கண்ணியமாய் அண்ணன் சொன்னதை செய் வோம்
"சாதி மத மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் ...சாதி மத கொடுமை தரைமட்டமாக்குவோம்
இந்தி ஒழிப்போம்
தேன் தமிழை காப்போம்"
இப்பாடலை அப்போது கேட்ட திமுக தொண்டனின் நாடி நரம்புகள் துடித்தெழுந்தது
வீறு கொண்டு எழுந்தான் எனறால் மிகையல்ல
அப்பொதெல்லாம்...
திமுக
கலப்பு திருமணம் கோவில் அல்லாத சீர்திருத்த திருமணம் என முன்னெடுப்பு செய்து கலப்பு திருமணம் செய்து வருபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்கள் இருந்தார்கள்
இதில் கலைஞர் கருணாநிதி எண்ணெற்ற தொண்டர்களின் கலப்பு திருமணம் சீர்திருத்த திருமணம் நடத்தி வைத்தார் என்பது வரலாறு
ஆனால்?
இன்று சாதி மத மற்ற சமுதாயம் அமைத்தே 🔥 தீருவோம் என்ற கொள்கை எங்கே போச்சு இருக்கின்றனவா என கேட்க தோன்றுகிறது.
ஆதிக்க சாதி மதம் பார்த்து எம்எல்ஏ மா.செ அதிகார பதவி தேர்வு
தமிழகத்தில்... எந்தெந்த மாவட்டங்களில் எந்த சாதி மெஜாரிட்டி அல்லது இமேஜை உருவாக்கியுள்ளார்களோ ?
அந்த சாதி சேர்ந்த வர்கள் மட்டுமே
திமுக மாவட்டச் செயலாளர் ஆக வரமுடியும்.
ஆதிக்க சாதி அடிப்படையில்....
எம்எல்ஏ அமைச்சர் மேயர் எம்எல்ஏ கவுன்சிலர் பஞ்சாயத்து தலைவர் பதவி என்ற நிலைக்கு
திமுக தள்ளப்பட்டு கட்சிக்காக உழைத்த மைனாரிட்டி சமுகம் பின் சென்று விட்டது என்பதே யதார்த்தம்
"அன்று இருந்து இன்று வரை திமுக மீது பற்று உள்ள இஸ்லாமியர் நிலைமையும் இதுவே"
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பட்டியல் இன சமுகத்தை சேர்ந்த வர்கள் எத்தனை பேர் திமுக மாவட்ட செயலாளர் ஆக இடம் பெற்றுள்ளன இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா!
ஒவ்வொரு தேர்தல் போதும் சாதி பாத்து எம்எல்ஏ எம்பி வேட்பாளர் அறிவிப்பு திமுக தலைமையிடம் வருகிறது
வெற்றி பெற்று வருபவர்கள் தான் சார்ந்த சாதி சேர்ந்தவர் க்ளே அனைத்து பதவிகளும் நிரப்ப பட வேண்டும் குறிக்கோள் கொண்டு மற்ற மைனாரிட்டி சமுகத்தை சேர்ந்தவர்களை வளர தடுக்கிறார்கள் இவர்களால் ஒரு சாதாரண கவுன்சிலர் வார்டு சீட் பெற கூட முடியாது குறுநில மன்னர்களாய் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முட்டுக்கட்டையாய் முடக்கி விடுகிறார்கள்
அடிமட்ட திமுக தொண்டன் விரக்தி
இப்படி ஒதுக்கினாலும்
திமுக கட்சியில் இருந்து கொண்டு கட்சி தலைமைக்கு கட்டுப்பாட்டு வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுகிறான் பணம் அன்பளிப்பு பெற்றாலும் பெறாவிட்டாலும்?
ஒவ்வொரு தேர்தல் போதும்...
வெற்றி தோல்வியில் பங்கு கொள்கிறான்
வருத்தமான விஷயம் என்னவென்றால்??
இப்போது உள்ள அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் மேயர் சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்
திமுக தொண்டனின் வேலை உதவி மற்றும் முக்கிய பிரச்சினை உதவி என அனுகினால் மேற்கண்ட வர்கள் எந்த உதவியும் செய்வதும் இல்லை ஒரு ஆதரவாக பதில் கூறமாட்டார்கள்
வீட்டு முன்போ அலுவலகம் முன்போ நிற்க கூட முடியாது அடிவருடிகளால்
துரத்தி விட படுகிறார்கள்
இதையெல்லாம் தாங்கள் யாரிடமும் சொல்ல முடியும் என ஏக்கத்தில் உடைந்து போயுள்ளனர்.
மிக மிக வேதனை!
ஒவ்வொரு திமுக அமைச்சர்களும் திமுக அடிமட்ட தொண்டர்களை நடத்தும் விதம் வேற லெவல் கொரானா மற்றும் கனமழை கால கட்டங்களில் சொல்லவே வேண்டாம்? இது நம் கட்சி தானா?
இந்நிலை மாற வேண்டும் திமுக தொண்டர்களின் இல்ல விழா இறப்பு போன்றவைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற குறைந்த பட்சம் எதிர்ப்பார்பை கூட திமுக மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை என்பதே மிக மிக அதிக வேதனை!!!
இனியாவது..
திமுக சாதி மத மற்ற மாவட்ட செயலாளர் நியமித்தல் அந்தெந்த மாவட்டங்களில் மைனாரிட்டி மற்றும் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த எம்எல்ஏ அமைச்சர் உருவாக்க வேண்டும் செய்வார்களா என்பதே அனைவரின் கேள்விகளாக உள்ளது
யாராயினும் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும்
திமுக தலைமை இனியாவது....
எம்எல்ஏ மேயர் சேர்மன் வெற்றி பெற்றவர்கள் அடுத்த முறை தேர்தலில் வாய்ப்பு வழங்க கூடாது.
வேட்பாளர் தேர்வு போது ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் அடுத்து வாய்ப்பு வழங்க கூடாது
அவரது குடும்பத்தில் இருந்து மகன் மகள் என வருபவர்களுக்கும் வழங்க கூடாது இதை நடைமுறைப்படுத்தும் திமுக வில் குறுநில மன்னர்கள் உருவாவதை தடுக்கலாம்.
திமுக அடுத்த கட்டத்திற்கு உயரும்...!!
பவளவிழா
திமுக அமைச்சர் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர் இவர்கள் இடையே ஆட்சி கட்டிலில் திமுக அமர்ந்து இருப்பதால் மகிழ்ச்சியை தரலாம்
கிராமம் மற்றும் நகர்புற அடிமட்ட திமுக தொண்டர்கள் தங்கள் மேற்கண்டவர்களில் வெறுப்பில் திமுக கொடி ஏற்றிட மன நிலையில் இல்லாமல் கண் கூடாக வெறுமையே!!!!
வீதிகளில் சிகப்பு கறுப்பு தெரியல
விளம்பர கவர் ஊடகங்கள் பொய்யுரைக்கும் உஷாராக இருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக