புதன், 23 ஆகஸ்ட், 2023

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் தீடீர் சந்திப்பு தூத்துக்குடி மா.செ பதவி மாற்றம் வருமா ? தூத்துக்குடி அதிமுக வில் பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 24-8-2023

த.சண்முகசுந்தரம்

பாக்ஸ் நியூஸ் அருணன் 

மதுரை பொன் விழா எழுச்சி மாநாடு பின்பு சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் சென்று தீடீர் சந்திப்பு கோரிக்கை வைத்துள்ளனர்..இப்போ உள்ள மா.செ.பதவிக்கு மாற்றம் வருமா!!!!

இதனால் தூத்துக்குடி அதிமுக வினர் மத்தியில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது பற்றிய செய்தியாவது -

     தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 20ம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை யொட்டி ..

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட அரசியல் நிலவரம் குறித்து பேசிவிட்டு மகிழ்ச்சி உடன் 

சித செல்லப்பாண்டியன் திரும்பி வந்துள்ளார்



இதனால் மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் சி.த செல்லப்பாண்டியனுக்கு கைக்கு வரும் என அவரது ஆதரவாளர்கள் இப்போது பரபரப்பு காட்டி வருகின்றனர். 

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் மாநகராட்;சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, தெற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், கோமதி மணிகண்டன், வட்டச்செயலாளர்கள் ராஜா, அருண்குமார், துரைசிங், முன்னாள் வட்டச்செயலாளர் கோட்டாளமுத்து, போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், மண்டல முன்னாள் இணைச்செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், சிறுபான்மை பிரிவு பிரபாகர், ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஏற்கனவே நீண்ட வருடமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் எடப்பாடி பழனிச்சாமி க்கு நம்பிக்கை உரியவர் ஆக இருந்து வருகிறார். 

தற்போது விரைவில் மாற்றம் கீற்றம்  என ஒரு தரப்பு கூறிவருவதால்...

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தரப்பு கொதிக்க தொடங்கிவிட்டது


 கடந்த 2021 ல எதிர்கட்சியாக அதிமுக ஆன நிலையில் கூட ஆளும் கட்சி திமுக க்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் செல்லாமல் கட்சியை சமாளித்து கட்டு்கோப்பாக நடத்தி வருபவர் 

மேலும்அதிமுக  2021- தோல்வி க்கு பின்னரும் திமுக அமமுக மதிமுக பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட அதிகயளவில் அதிமுக உறுப்பினராக கட்சி யில் இவர் முன்னிலையில் இனைத்து வருகிறார்.

திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கீதாஜீவன் அமைச்சர்கள் கனிமொழி எம்பி இடம் நல்ல பெயர் வாங்கிடஎவ்வளவோ முயன்றும்  மாவட்ட அதிமுக வினரை திமுக வுக்கு இழுக்கும் விஷயத்தில் முடியவில்லை ஏன்? மண்டபம் வைத்து அதிமுக வினர் இனைப்பு என்று சொல்லி சிலரை தவிர பிற கட்சி சேர்ந்த களை தான் திமுக கட்சி யில் சேர்த்தனர்.



எஸ் பி சண்முகநாதன் ஒவ்வொரு முறையும் அதிமுக பொதுகூட்டம் ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகியவற்றில் திமுக ஸ்டாலின் தூத்துக்குடி எம்பி கனிமொழி கீதாஜீவன் ஜெகன் பெரியசாமி ஒபிஎஸ் ஆகியோரை பொது மேடையில் பொளந்து கட்டி பேசி வருகிறார் இதனால் அதிமுகவினர் உற்சாகத்துடன் உள்ளார்கள் 

 மற்ற மாவட்ட ங்களை விட ஒபிஎஸ் அணிக்கு கென்று எவரையும் செல்ல விடாமல் காணாமல் செய்துள்ளார் என்கிறார்கள்.என தக.. தகிக்கிறார்கள்...


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக